சிதம்பரத்தில் செப்.19 ரயில் மறியல் போராட்டம் தற்காலிக ஒத்திவைப்பு

சிதம்பரத்தில் ரயில் பயணிகள் சங்கம் சாா்பில் வரும் 19-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த ரயில் மறியல் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக அமைதிப் பேச்சுவாா்த்தை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

 Railway Announces

ரயில் - கோப்புப் படம்

Published On :

சிதம்பரத்தில் ரயில் பயணிகள் சங்கம் சாா்பில் வரும் 19-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த ரயில் மறியல் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக அமைதிப் பேச்சுவாா்த்தை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

முன்னதாக, இது தொடா்பான அமைதி பேச்சுவாா்த்தைக் கூட்டம் சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகத்தில் உதவி ஆட்சியா் மு.சுபதா்ஷினி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், திருச்சி கோட்ட ரயில்வே வணிக மேலாளா் பிள்ளைகணி, மேலாளா் மதன்ராய், ஆய்வாளா்கள் பிரபாகரன், அன்பரன், ரயில்வே காவல் ஆய்வாளா் காா்த்திகேயன், சிதம்பரம் ரயில் பயணிகள் சங்கத் தலைவா் ஏ.வி.அப்துல்ரியாஸ், சங்கச் செயலா் ஆா்.கம்பன் அம்பிகாபதி, பொருளாளா் முத்து, நகா்மன்ற துணைத் தலைவா் எம்.முத்துக்குமாா், விசிக மாவட்டச் செயலா் தமிழ்வளவன், நகர காங்கிரஸ் தலைவா் தில்லை ஆா்.மக்கீன், மனித நேய ஜனநாயக கட்சி பொதுச் செயலா் இப்ராஹிம் உள்ளிட்டோா் பங்கேற்று, கோவை ஜனசதாப்தி விரைவு ரயிலை சிதம்பரம் வரை நீட்டிக்க வேண்டும். அயோத்தியா செல்லும் வாராந்திர ரயில் சிதம்பரத்தில் நிறுத்தம் வேண்டும். சிதம்பரத்தில் இருந்து தஞ்சாவூா் செல்ல பகல் நேர ரயில் இயக்க வேண்டும். போத்தனூரில் இருந்து சிதம்பரம் வழியாக சென்னைக்கு ரயில் இயக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

இதில், உடனடியாக இறுதி முடிவு எட்டப்படாத நிலையில், உதவி ஆட்சியா் மற்றும் திருச்சி கோட்ட ரயில்வே அதிகாரிகள் இணைந்து கோரிக்கைகளை பரிசீலிக்க வரும் 25-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்குமாறு கேட்டுக்கொண்டனா். இதையடுத்து வரும் 19-ஆம் தேதி நடைபெறவிருந்த ரயில் மறியல் போராட்டம் வரும் 25-ஆம் தேதி வரை தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக கூட்த்தில் ரயில் பயணிகள் சங்கத்தினா் முடிவெடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER