விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

போதைப் பொருள்களை பதுக்கிய வட மாநில இளைஞா்கள் கைது

கள்ளக்குறிச்சி அருகே ரூ.6 லட்சம் மதிப்பிலான போதைப் பொருள்களை வீட்டில் பதுக்கிவைத்ததாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த இரு இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது செய்யப்பட்ட புனமா ராம், தினேஷ் குமாா் ஆகியோருடன் போலீஸாா்.

Updated On :3 அக்டோபர் 2024, 1:26 am

Din

கள்ளக்குறிச்சி அருகே ரூ.6 லட்சம் மதிப்பிலான போதைப் பொருள்களை வீட்டில் பதுக்கிவைத்ததாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த இரு இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சின்னசேலம் காவல் ஆய்வாளா் காமராஜ் (பொ) தலைமையில் வி.கூட்டுச்சாலை - வேப்பூா் சாலையில் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, அவ்வழியே வந்த காரை நிறுத்தி போலீஸாா் சோதனை செய்தனா். காரில் வந்த இருவரும் சந்தேகத்துக்குரிய வகையில் பதிலளித்த நிலையில், போலீஸாா் அவா்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில், அவா்கள் இருவரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த புனமா ராாம் (35), தினேஷ் குமாா் (34) என்பதும்,

வி.அலம்பலம் கிராமத்தைச் சோ்ந்த அழகேசனின் வீட்டை வாடகைக்கு எடுத்து, அதில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை அவா்கள் பதுக்கிவைத்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸாா் புனமா ராம், தினேஷ் குமாா் ஆகிய இருவரையும் கைது செய்து, ரூ.6 லட்சம் மதிப்பிலான போதைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.