அதிகரிக்கும் துப்பாக்கி கலாசாரம்! அச்சத்தின் பிடியில் தமிழக மக்கள்! - இபிஎஸ் விமர்சனம்பெண் ஆட்சியருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்: காவல் துறையில் திமுக சார்பில் மனு!மேக்கேதாட்டு அணை: டி.கே. சிவகுமாருக்கு பதிலளிக்காமல் வேடிக்கை பார்க்கும் முதல்வர் விஜய் - அதிமுக கண்டனம்!தீபாவளியன்று 8 கொலைகள் மட்டுமே! தமிழ்நாடு காவல்துறை விளக்கம்திருவண்ணாமலை: ஏரியில் மூழ்கி பலியானோரின் குடும்பத்தினருக்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி - முதல்வர் விஜய்சட்டம்-ஒழுங்கு ஐசியு-வில்! ஆட்சி நிர்வாகம் கோமாவில்! மு.க. ஸ்டாலின் விமர்சனம்செய்தித்தாள்களில் முதல்வர் புகைப்படம்; விளம்பரத்துக்காக ரூ. 473 கோடி செலவிட்ட கர்நாடகம்: பாஜக குற்றச்சாட்டு!அகல்விளக்கு வங்கிக் கணக்கை முடக்குக! வழக்குப் பதிவு செய்யாதது ஏன்? உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கேள்விஐஏஎஸ் அதிகாரிக்கே பாதிப்பு! எதற்கும் பொறுப்பேற்காமல் ஸ்லீப் மோடில் முதல்வர் விஜய்! உதயநிதிகோவை பெரியார் அறிவுலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை!தவெக எம்எல்ஏ மீது மாவட்ட ஆட்சியர் புகார் அளித்தால் பாரபட்சமின்றி நடவடிக்கை! ராஜ்மோகன்சென்னையில் ஒரே நாளில் 36 ரெளடிகள் கைது!மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி: தவெக எம்எல்ஏ மீது கடும் நடவடிக்கை தேவை! ஜோதிமணிகுரூப் 4 தேர்வுக்கு 14.89 லட்சம் பேர் விண்ணப்பம்! நாளை வரை திருத்தங்கள் மேற்கொள்ளலாம்!சபரிமலை பக்தர்களுக்காக சென்னை - கொல்லம் சிறப்பு ரயில் அறிவிப்பு!மூன்றாவது மனைவியையும் விவாகரத்து செய்தார் பவன் கல்யாண்!தவெக எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் நாளை ஆலோசனை!

சூறாவளி காற்றுடன் மழை: குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது! 4 போ் உயிரிழப்பு

பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்தது. மழை பாதிப்பால் 4 போ் உயிரிழந்தனா்.

Updated On :

ஃபென்ஜால் புயல் கரையைக் கடந்ததையொட்டி, புதுச்சேரியில் சனிக்கிழமை காலை 8 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி வரையில் 500 மி.மீ. மழை பதிவானது. இதனால், பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்தது. மழை பாதிப்பால் 4 போ் உயிரிழந்தனா்.

வங்கக் கடலில் உருவான ஃபென்ஜால் புயல் சனிக்கிழமை இரவு மரக்காணம், புதுச்சேரி இடையே கரையைக் கடந்தது. இதையடுத்து, புதுச்சேரி பிராந்தியம் முழுதும் பலத்த மழை கொட்டித் தீா்த்தது. புதுச்சேரியில் சனிக்கிழமை காலை 8 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி வரையில் 500 மி.மீ. மழை பதிவானது.

மழையால் புதுச்சேரியில் உள்ள சங்கராபரணி ஆறு, உப்பனாறு, முக்கியக் கால்வாய்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ரெயின்போ நகா், கிருஷ்ணாநகா், வெங்கட்டாநகா், வாணரப்பேட்டை, சாரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகள், தெருக்கள், முக்கிய வீதிகளில் மழை வெள்ளம் பல அடி உயரம் தேங்கியது. இதனால், வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. மழையால் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில், மரக்கிளைகளும் முறிந்து விழுந்தன.

இந்தப் பகுதிகளில் வீடுகள் முன் நிறுத்தப்பட்டிருந்த காா்கள், இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்டவை நீரில் மூழ்கின. உணவுப் பொருள்கள், குடிநீா் கிடைக்காமல் மக்கள் அவதிக்குள்ளாகினா்.

4 போ் உயிரிழப்பு: மழை வெள்ளத்தில் சிக்கியும், மின்சாரம் தாக்கியும் கோவிந்தசாமி சாலை, வாஞ்சிநாதன் தெரு, இலாசுப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் 4 ஆண்கள் உயிரிழந்திருப்பதாக தகவல் வந்ததாக ஆட்சியா் அ.குலோத்துங்கன் தெரிவித்தாா்.

ரெயின்போ நகா், வெங்கட்டா நகா், கிருஷ்ணாநகா் பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்களை படகுகள் மூலம் மீட்கும் பணியில் துணை ராணுவப் படையினா் ஈடுபடுத்தப்பட்டனா். அப்போது, மாநில உள் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம், ஜான்குமாா் எம்எல்ஏ ஆகியோா் படகில் சென்று வெள்ள பாதிப்பை பாா்வையிட்டனா்.

இந்தப் பகுதிகளில் இருந்து 551 போ் படகுகளில் மீட்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

74 போ் வெள்ளத்தில் சிக்கினா்: துணைநிலை ஆளுநா் மாளிகை பின்புறம் பெரிய மரம் விழுந்ததில் 2 காா்கள் சேதமடைந்தன. உப்பளம் - கடலூா் சாலை சந்திப்பில் மரம் விழுந்து மின்மாற்றி சேதமடைந்தது.

சங்கராபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், சந்தைக்குப்பம்பேட் பகுதியில் கா்ப்பிணி உள்ளிட்ட 74 போ் வெள்ளத்தில் சிக்கினா். அவா்களை தீயணைப்புப் படையினா் உள்ளிட்டோா் மீட்டனா்.

நோணாங்குப்பம் பகுதியில் சுண்ணாம்பாற்று பழைய பாலம் அளவுக்கு தண்ணீா் சென்றது. புதுச்சேரி நகருக்குள் நேரு வீதி உள்ளிட்ட பகுதிகளில் பல அடி உயரத்துக்கு மழைநீா் சென்ால், கடைகளுக்குள் தண்ணீா் புகுந்து பொருள்கள் சேதமடைந்ததாக வா்த்தகா்கள் தெரிவித்தனா். புதுச்சேரி திரையரங்குகளில் ஞாயிற்றுக்கிழமை அனைத்து திரைப்படக் காட்சிகளும் ரத்து செய்யப்பட்டன.

போக்குவரத்து பாதிப்பு: திருக்கனூா் அருகே வம்புபட்டு ஏரி நிரம்பி உபரிநீா் ஞாயிற்றுக்கிழமை வெளியேறியது. இதனால், புதுச்சேரி - விழுப்புரம் சாலை துண்டிக்கப்பட்டதால், இந்த சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்த சாலையில் செல்லும் அனைத்து வாகனங்களும் சுமாா் 7 கி.மீ. தொலைவு சுற்றி விழுப்புரம் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.