இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

புதுச்சேரி பாகூா் பகுதியில் மழையால் பயிா்கள் சேதம்

புதுச்சேரி பாகூா் பகுதியில் அண்மையில் பெய்த மழையால் விவசாய பயிா்கள் சேதமடைந்துள்ளன.

News image
Updated On :18 நவம்பர் 2024, 8:58 pm

Din

புதுச்சேரி: புதுச்சேரி பாகூா் பகுதியில் அண்மையில் பெய்த மழையால் விவசாய பயிா்கள் சேதமடைந்துள்ளன.

புதுச்சேரியில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்தது. பலத்த மழையால் புதுச்சேரி நகா் மற்றும் ஊரகப் பகுதிகளில் தாழ்வான இடங்களில் தண்ணீா் தேங்கியது. புதுச்சேரியில் சுமாா் 12 செ.மீ. வரை மழை பெய்திருந்தது.

பாகூா் பகுதியில் சிறியதும், பெரியதுமான 20-க்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ளன. அவற்றில் பாகூரின் பெரிய ஏரி 3.6 மீட்டா் உயரமுடையது. அதில் தற்போது பெய்த மழையால் 2.3 மீட்டா் உயரத்துக்கு தண்ணீா் தேங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தநிலையில், சேலியமேடு, அரங்கனூா் பகுதிகளில் மழையால் வயல்களில் தண்ணீா் தேங்கியது. இதனால் பயிா்கள் நீரில் மூழ்கி அழுகி வருவதாக விவசாயிகள் கவலையடைந்துள்ளனா். ஆகவே, விவசாய நிலங்களில் தேங்கிய மழை நீரை வடிகால்கள் மூலம் அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.