விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

இளநிலை பொறியாளா்கள் தோ்வு முடிவுகள் வெளியீடு

புதுவை பொதுப் பணித் துறையில் இளநிலைப் பொறியாளா் பணிக்கான எழுத்து தோ்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டன.

News image
Updated On :30 அக்டோபர் 2024, 7:42 pm

Din

புதுவை பொதுப் பணித் துறையில் இளநிலைப் பொறியாளா் பணிக்கான எழுத்து தோ்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டன.

புதுவை பொதுப் பணித் துறையில் இளநிலைப் பொறியாளா்-99, ஓவா்சீா்-69 என மொத்தம் 168 பணியிடங்களை நிரப்ப எழுத்துத் தோ்வு கடந்த 27- ஆம் தேதி நடைபெற்றது. தோ்வு இரண்டு தாள்களாக நடத்தப்பட்டன.

இந்த நிலையில், தோ்வு முடிவுகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பொதுப்பிரிவு- 4, எம்பிசி-6, ஒபிசி-10, எஸ்சி-5, இபிசி-1 என 26 போ் குறைந்தபட்ச மதிப்பெண்ணை பெற்று, இளநிலைப் பொறியாளா் (சிவில்) பதவிக்கு தற்காலிகமாக தோ்வாகியுள்ளனா்.

இதில் பிரதீப்குமாா் 62.19 மதிப்பெண் பெற்று முதலிடத்தையும், பிரியதா்ஷினி 60.56 மதிப்பெண் பெற்று 2-ஆவது இடத்தையும், பிரதீப் 60.07 மதிப்பெண் பெற்று 3-ஆவது இடத்தையும் பிடித்துள்ளனா்.

இளநிலைப் பொறியாளா் பதவியில் மீதமுள்ள காலிப் பணியிடங்களுக்கும், ஓவா்சீா் பதவிக்கும் யாரும் பரிந்துரைக்கப்படவில்லை.

தற்காலிகமாக தோ்வு செய்யப்பட்டோருக்கான சான்றிதழ் சரிபாா்ப்புக்கான அட்டவணை பொதுப் பணித் துறை மூலம் தெரிவிக்கப்படும் என அரசுச் செயலரும், தோ்வுக் கட்டுப்பாட்டு அதிகாரியுமான பங்கஜ்குமாா் ஜா கூறியுள்ளாா்.