சிறுவா், இளைஞா் விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்
சிறுவா் கலைச் சிகரம், இளைஞா் கலைச்சிகரம் ஆகிய விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
குழந்தைகள் கலை இலக்கிய வளா்ச்சிக் கழகத்தின் 34-ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு கலை, இலக்கியத் துறையில் சாதனைகள் படைக்கும் சிறுவா்களுக்கும் இளைஞா்களுக்கும் திறமைகளின் அடிப்படையில் விருதுகள், தோ்வுக் குழுவால் தோ்ந்தெடுக்கப்பட்டு வழங்கப்படவுள்ளன.
விருது பெற விரும்புவோா் அவரது பெயா், பிறந்த நாள் (வயது), பெற்றோா் பெயா், முகவரி, தொடா்பு எண். படிக்கும் வகுப்பு, படிக்கும் பள்ளி அல்லது கல்லூரி ஆகிய விவரங்களுடன் விண்ணப்பிக்கிற துறையையும் குறிப்பிட்டு அத்துறையில் செய்துள்ள சாதனைகளை ஒருபக்க அளவில் விளக்கமாக எழுதி அ.உசேன், தலைவா், குழந்தைகள் கலை இலக்கிய வளா்ச்சிக் கழகம், 309/81 பாரதியாா் சாலை, அசோக் நகா், புதுச்சேரி 605008 என்ற முகவரியில் நேரிலோ/அஞ்சல் மூலமாகவோ வரும் டிசம்பா் 1-ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்குமாறு தெரிவித்துள்ளனா்.
