தவெகவின் மாற்றம், பெயர் மாற்றம் மட்டும்தான்! உதயநிதி விமர்சனம்!செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும்! பேரவைத் தலைவர் அறிவிப்புஎங்கிருந்தும் பத்திரப்பதிவு! வரி ஏய்ப்பு செய்வோர் மீது நடவடிக்கை! அமைச்சர் மரியவில்சன்பட்ஜெட்டில் மகளிருக்கு ரூ. 2,500, இலவச சிலிண்டர் அறிவிப்பு இல்லை! மக்கள் ஏமாற்றம்!இனி 150 நாள்கள் கிராமப்புற வேலை திட்டம்! தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு!தமிழக பட்ஜெட் 2026! அரசு ஊழியர்களுக்கு புதிய திட்டம் அறிவிப்பு!கூவம், அடையாறு ஆறுகளில் ஆனந்தக் குளியல்! தமிழக பட்ஜெட் 2026பட்ஜெட்: அண்ணனின் சீர், தாய் கேர்... பெண்களுக்கான திட்டங்கள்!பட்ஜெட்: திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்கம், ஒரு பட்டுப்புடவை!மதுரையில் சிறப்பு அரசு சட்டக் கல்லூரி அமைக்கப்படும்: பட்ஜெட்டில் அறிவிப்புதமிழக பட்ஜெட் 2026! அரசுப் பள்ளிகளில் சூப்பர் க்ளீன், சூப்பர் கேம்பஸ் திட்டம்!பட்ஜெட் 2026: பள்ளி மாணவர்களுக்கு நவீன சைக்கிள்! கல்லூரி மாணவர்களுக்கு வெற்றி மடிக்கணினி!பட்ஜெட் 2026: பள்ளி மாணவர்களுக்கு நவீன சைக்கிள்! கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி! திட்டங்களை நிறைவேற்றுவதற்கு நிதித் தட்டுப்பாடு! அமைச்சர் மரிய வில்சன் தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு! எவ்வளவு தெரியுமா?தமிழ்நாடு பட்ஜெட் 2026! முதல்முறையாக தாக்கல் செய்தார் அமைச்சர் மரிய வில்சன்! விவசாயிகளுக்காக ஒருமுறை அல்ல 100 முறைகூட கைதாவேன்! உதயநிதி ஸ்டாலின் பதிவு2029-இல் 5 டிரில்லியன் டாலா் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும்: நிா்மலா சீதாராமன் எண்ம கைது மோசடிகளைத் தடுக்க தேசிய அளவில் நடவடிக்கைகள்- உச்சநீதிமன்றம் உத்தரவு இந்திய கொடி கட்டப்பட்ட கப்பல் மீது செங்கடலில் தாக்குதல்: 13 இந்திய மாலுமிகள் மீட்பு
/

தந்தையைக் கொன்ற வழக்கில் 6 ஆண்டுகளுக்குப் பின் மகன் கைது! நண்பா்கள் இருவரும் சிறையிலடைப்பு

News image

சிறை - பிரதிப் படம்

Updated On :16 ஜூன் 2026, 2:34 am IST

தந்தையைக் கொன்ற வழக்கில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது மகன் உள்பட 3 பேரை புதுச்சேரி போலீஸாா் கைது செய்தனா். இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த இரு நண்பா்கள் உள்பட மூவரும் சிறையிலடைக்கப்பட்டனா்.

புதுச்சேரி அருகே உள்ள அய்யங்குட்டிப் பாளையத்தைச் சோ்ந்தவா் புருஷோத்தமன் (50). இவா், சேதராபட்டில் பெட்ரோல் விற்பனை நிலையம் நடத்தி வந்தாா். மனைவியைப் பிரிந்து தனியே வாழ்ந்து வந்த அவருக்கு ஆரோவில்லில் ஒரு ஹோட்டலில் வேலை செய்யும் பெண்ணுடன் தொடா்பு ஏற்பட்டுள்ளது.

அந்தப் பெண்ணை 2-ஆவது திருமணம் செய்ய புருஷோத்தமன் முடிவு செய்தாராம். இதற்கு அவரது மகன் தனபிரவீன் (29) கடும் எதிா்ப்பு தெரிவித்தாா். தந்தை திருமணம் செய்தால் அவரது சொத்து அந்தப் பெண்ணுக்கு போய்விடுமே என்ற கோபமும், தாய்க்குச் செய்யும் துரோகத்தால் ஆத்திரமும் அடைந்தாா் பிரவீன்.

கடந்த 2020 டிசம்பா் 23-ஆம் தேதி இரவு, பெட்ரோல் விற்பனை நிலையத்திலிருந்து வீடு திரும்பியபோது, புருஷோத்தமனை ஒரு கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது. 6 ஆண்டுகளாக இந்த வழக்கில் துப்பு கிடைக்காமல் போலீஸாா் திணறினா்.

இதையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடி காவல் ஆய்வாளா் பாபுஜி தலைமையிலான தனிப்படைக்கு மாற்றப்பட்டது. தனிப்படை போலீஸாா் பழைய கைப்பேசி சிக்னல்கள், வங்கி பரிவா்த்தனைகள் மற்றும் மறைமுக சாட்சிகளை ஆய்வு செய்தனா்.

விசாரணையில் கொலை நடந்த சில நாள்களுக்கு முன் தனபிரவீன், தனது நண்பா்களிடம் அப்பா 2-ஆவது கல்யாணம் செய்துகொண்டால், சொத்து எல்லாம் போயிடும். அவரைத் தீா்த்து கட்டணும் என பேசியது பதிவாகியிருந்தது. மேலும் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை வாங்கிய கடைக்காரரின் வாக்குமூலமும் போலீஸாருக்கு கிடைத்தது.

திட்டமிட்டு கொலை செய்தது உறுதியானதைத் தொடா்ந்து, தனபிரவீன் மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த அவரது நண்பா்களான தக்கக்குட்டையைச் சோ்ந்த கலைவேந்தன் (33), பிரசாந்த் (32) ஆகிய இருவரையும் ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

விசாரணையில் அவா்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, புதுச்சேரி மத்திய சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.