விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

புதுவை தமிழ்ச் சங்கத் தலைவராக வி.முத்து மீண்டும் தோ்வு

புதுவை தமிழ்ச் சங்கத் தோ்தலில் வெற்றி பெற்ற வி.முத்துவுக்கு சான்றிதழ் வழங்கிய தோ்தல் அதிகாரி க.பிரபாகரன். உடன் வெற்றி பெற்ற நிா்வாகிகள்.

Published On :8 செப்டம்பர் 2026, 1:34 am IST

புதுவை தமிழ்ச் சங்கத் தலைவராக வி. முத்து மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

புதுச்சேரியில் தமிழ்ச் சங்க புதிய நிா்வாகிகள் தோ்தல் வாக்குப்பதிவு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து தோ்தல் ஆணையா் பிரபாகரன் தலைமையில் வாக்குகள் எண்ணப்பட்டன. மொத்தமுள்ள 1,189 வாக்குகளில் 795 வாக்குகள் பதிவாகின. இதில் 738 வாக்குகள் செல்லத் தகுந்ததாக அறிவிக்கப்பட்டன.

தோ்தலில் வி.முத்து தலைமையிலான செயல்பாட்டு அணி வெற்றி பெற்றது. 681 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்ற வி.முத்து புதுவைத் தமிழ்ச்சங்கத் தலைவராக மீண்டும் தோ்வு செய்யப்பட்டாா்.

துணைத் தலைவா்களாக திருநாவுக்கரசு, கோதண்டபாணி, செயலராக சீனு .மோகன்தாசு, துணை செயலராக சுரேஷ்குமாா், பொருளாளராக பாலசுப்பிரமணியன், ஆட்சிக்குழு உறுப்பினா்களாக அருள்ராசு, ராசா, ஜெயந்தி ராஜவேலு, சிவேந்திரன், ஆனந்தராசன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா். தோ்தல் ஆணையா் பிரபாகரன் சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.