கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

மக்கள் தொடர்பு முகாமில் நலத் திட்ட உதவிகள் அளிப்பு

வானூர் வட்டம், ஆகாசம்பட்டில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 219 பேருக்கு ரூ.30 லட்சத்து 49 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

News image
Updated On :28 டிசம்பர் 2017, 3:03 am

தினமணி

வானூர் வட்டம், ஆகாசம்பட்டில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 219 பேருக்கு ரூ.30 லட்சத்து 49 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
 மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில், இருளர் சாதிச்சான்று 31 பேருக்கும், மாற்றுத் திறனாளி மாதாந்திர உதவித்தொகை 30 பேருக்கும், ஆதரவற்ற விவசாயக்கூலி உதவித்தொகை 2 பேருக்கும், காசநோயாளி உதவித்தொகை 8 பேருக்கும், குடும்ப அட்டை 47 பேருக்கும், ஊரக வளர்ச்சித் துறை சார்பாக பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சத்து 57 ஆயிரத்து 880 பேருக்கும், வேளாண் துறை சார்பில் ரூ.1 லட்சத்து 9 ஆயிரம் மதிப்பில் விவசாயக் கருவிகள் 10 பேருக்கும், தோட்டக்கலைத்துறை சார்பில் ரூ.18.48 லட்சம் மதிப்பில் விதைகள் மற்றும் விவசாயக் கருவிகள் 22 பேருக்கும் என மொத்தம் 219 பேருக்கு ரூ.30 லட்சத்து 49 ஆயிரத்து 210 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
 நலத்திட்ட உதவிகளை வழங்கி ஆட்சியர் பேசியதாவது: பொது மக்கள் அரசு நலத்திட்ட உதவிகளை இடைத்தரகர்களை நாடாமல், நேரடியாக தொடர்புடைய துறையினருக்கோ, குறைதீர் கூட்டங்கள், மக்கள் தொடர்பு முகாம்களில் விண்ணப்பித்து பயன்பெற வேண்டும்.
 வானூர் வட்டம் விவசாயம் நிறைந்த பகுதியாகும். இங்கு நுண்ணீர் சொட்டுநீர் பாசனம் மூலம் அதிகளவில் விவசாயம் செய்ய வேளாண் துறையினரை அணுக வேண்டும். இந்தாண்டு (2017-18) நுண்ணீர் சொட்டு நீர் பாசனம் மூலமாக 41 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில், ரூ.318 கோடி செலவில் மாவட்டத்தில் விவசாயம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. அதில், 30 ஆயிரம் ஏக்கர் நிறைவுபெற்று, 10 ஆயிரம் ஏக்கர் அளவில் நிலுவையில் உள்ளது.
 வானூர் வட்டத்தில் மட்டும் 250 ஏக்கர் நுண்ணீர் சொட்டு நீர்ப்பாசனம் மூலம் விவசாயிகள் பயிர் செய்ய குறியீடு நிர்ணயித்து, உபகரணங்களை வழங்க தயாராக உள்ளோம். நுண்ணீர் சொட்டுநீர் பாசனம் மூலம் பயிர் செய்ய குறு, சிறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், பெருவிவசாயிகளுக்கு 70 சதவீத மானியமும் அரசு வழங்குகிறது.
 நடப்பு காரிப் பருவத்தில் சாகுபடி செய்துள்ள நெல், கம்பு, பருத்தி, மக்காச்சோளம், மணிலா, வாழை, மஞ்சள், மரவள்ளி, வெங்காயம் ஆகிய பயிர்களுக்கு விவசாயிகள் பயிர் காப்பீட்டு செய்து கொள்ளலாம். மாவட்டத்தை திறந்த வெளியில் மலம் கழித்தல் இல்லாத மாவட்டமாக உருவாக்க வேண்டும்.
 கழிப்பறை இல்லாதவர்கள், அப்பகுதி வட்டார வளர்ச்சி அலுவலரை சந்தித்து, அரசு வழங்கும் ரூ.12 ஆயிரம் நிதியுதவி பெற்று உடனடியாக தனிநபர் கழிப்பறைகளை கட்ட வேண்டும் என்றார்.
 வானூர் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சக்கரபாணி, கோட்டாட்சியர் கே.சரஸ்வதி, உதவி ஆட்சியர் ரஞ்சனி, ஆதிதிராவிடர் நல அலுவலர் அருணாசலம், மாவட்ட வழங்கல் அலுவலர் ராஜேந்திரன், துணை ஆட்சியர் (பயிற்சி) காயத்ரி, வேளாண்மை இணை இயக்குநர் செல்வராஜ், வேளாண் அலுவலர் சுரேஷ், குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் அன்பழகி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.