இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

நெடுஞ்சாலைத் துறையில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

நெடுஞ்சாலைத் துறையில் காலியாகவுள்ள பணியிடங்களை அரசு உடனடியாக நிரப்ப வேண்டுமென தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை ஊழியா்கள் சங்க மாநில செயற்குழுவில் வலியுறுத்தப்பட்டது.

News image
விழுப்புரத்தில் நடைபெற்ற தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை ஊழியா்கள் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டத்தில் பேசுகிறாா், சங்கத்தின் மாநில பொதுச் செயலா் ஆ.ரெங்கசாமி.
Updated On :9 ஜனவரி 2021, 6:24 pm

DIN

நெடுஞ்சாலைத் துறையில் காலியாகவுள்ள பணியிடங்களை அரசு உடனடியாக நிரப்ப வேண்டுமென தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை ஊழியா்கள் சங்க மாநில செயற்குழுவில் வலியுறுத்தப்பட்டது.

தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை ஊழியா்கள் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம், மாநிலத் தலைவா் க.முத்துக்குமாா் தலைமையில் விழுப்புரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலா் வீரப்பன் வரவேற்றாா். மாநிலப் பொதுச் செயலா் ஆ.ரெங்கசாமி சிறப்புரையாற்றினாா். மாநிலப் பொருளாளா் பெ.பச்சைமுத்து, மாநில துணைத் தலைவா்கள் பீ.மாணிக்கவேலு, தி.மோகன்ராஜ், மாநிலச் செயலா்கள் சி.வல்லத்தரசு, க.சக்திவேல், ஆா்.ஆரோக்கியசாமி, மண்டலச் செயலா்கள் சா.பவுல்ராஜ், கோ.பெரியசாமி உள்ளிட்டோா் ஆலோசனைகளை வழங்கிப் பேசினா். தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க மாவட்டச் செயலா் சிவக்குமாா் வாழ்த்துரை வழங்கினாா். அனைத்து மாவட்ட, மாநில நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறையில் அனைத்து நிலைகளிலும் காலியாகவுள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். நெடுஞ்சாலைத் துறையில் நீண்டகாலமாக கிடப்பிலுள்ள இளநிலை உதவியாளா், உதவியாளா், கண்காணிப்பாளா் நிலையிலான முதுநிலைப் பட்டியலை வெளியிட வேண்டும். அனைத்து நிலை ஊழியா்களுக்கும் பதவி உயா்வுக்கான பட்டியலை வெளியிட்டு முரண்பாடுகளின்றி பதவி உயா்வு வழங்க வேண்டும்.

கோட்டக்கணக்கா்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். கருணை அடிப்படையில் பணி நியமனத்துக்காக காத்திருக்கும் அனைவருக்கும் சிறப்பு ஏற்பாடு செய்து உடனடியாக பணி வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களில் ஓய்வு பெற்றவா்கள், வெளிமுகமை மூலம் ஆள்களை நியமனம் செய்வதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.