விவசாயம்

ஒகேனக்கல்லில் நொடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் வரத்து

DIN

தருமபுரி: ஒகேனக்கல் காவிரியாற்றில் ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி நொடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வரத்து இருந்தது.
கர்நாடக அணைகளில் இருந்து காவிரியாற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாக சனிக்கிழமை காலை முதல் செய்திகள் வெளியாயின.
இந்த நிலையில், ஒகேனக்கல் காவிரியாற்றில் சனிக்கிழமை மாலை வரை நொடிக்கு 8 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. ஆனால், ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி இந்த வரத்து 10 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது.
ஞாயிற்றுக்கிழமை என்பதால், பொதுப்பணித் துறையினர் பிற்பகல் தண்ணீர் வரத்து அளவீடு செய்ய வரவில்லை எனத் தெரிகிறது. காலை தண்ணீர் வரத்து நிலவரம் குறித்த குறுஞ்செய்தி வருவாய்த் துறை அலுவலர்களுக்கு வந்திருக்கிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

SCROLL FOR NEXT