பெங்களூரு

பெங்களூரில் 23 ஆயிரம் மரங்களை நட்டு பராமரித்துவரும் தன்னார்வ அமைப்பு

பெங்களூர், நவ. 23: ஆயிரம் மரங்களை நட்டு பராமரித்து வருகிறது பெங்களூரைச் சேர்ந்த சமுகசேவை அமைப்பு.  கடந்த 15 ஆண்டுகளாக, பெங்களூரில் உள் கட்டமைப்பு வளர்ச்சி வேகமாக நடந்து வருகிறது. சாலை அகலப்படுத்துதல்,

ந.முத்துமணி

பெங்களூர், நவ. 23: ஆயிரம் மரங்களை நட்டு பராமரித்து வருகிறது பெங்களூரைச் சேர்ந்த சமுகசேவை அமைப்பு.

 கடந்த 15 ஆண்டுகளாக, பெங்களூரில் உள் கட்டமைப்பு வளர்ச்சி வேகமாக நடந்து வருகிறது. சாலை அகலப்படுத்துதல், மெட்ரோ ரயில் திட்டம், தேசிய நெடுஞ்சாலை, மோனோரயில், மேம்பாலம், சுரங்கப்பாலம் என பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் ஒன்றன்பின் ஒன்றாக நடந்துவருகின்றன.

சர்வதேச நகரமாக மாறிவரும் பெங்களூருக்கு இது அவசியமானதென்று என்பது மறுக்க முடியாதது. ஆனால் மறுபுறம், பூங்கா நகரம் என்று அறியப்படும் பெங்களூரில் வளர்ச்சி திட்டங்கள் என்ற பெயரில் மரங்கள் வெட்டப்படுவதாக பல்வேறு சுற்றுச்சுழல்

ஆர்வலர்கள் மாநில அரசு மீது புகார் தெரிவித்துவருகின்றனர். ஜெயமகால் சாலையை விரிவாக்க 850 மரங்களை வெட்ட அரசு திட்டமிட்டுள்ளதற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

 கடந்த 15 ஆண்டுகளில் மட்டும் 50 ஆயிரத்துக்கும் அதிகமான மரங்கள் வெட்டப்பட்டிருப்பதாக சூற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பான விவாதம் ஒருபுறம் நடந்துவரும் நிலையில், மற்றொருப்புறம் மரங்களை வெட்டினால் என்ன புதிதாக

மரக்கன்றுகளை நடுவோம் என்கிற நோக்கில் செயல்பட்டுவருகிறது ரஜனட் யெக்னேஸ்வரன் அறக்கட்டளை என்ற சமூகசேவை அமைப்பு.

இதை நிர்வகித்து வருகிறார் ஜேனட் யெக்னேஸ்வரன். 2005ம் ஆண்டு முதல், பெங்களூரில் இதுவரை 23 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறது இந்த அமைப்பு. இதுகுறித்து ஜேனட், தினமணி நிருபரிடம் கூறியதாவது:  பூமி வெப்பமாதல், வானிலை மாற்றம், சுற்றுச்சூழல் மாசடைதல் போன்ற சொற்கள் நவீன

வாழ்க்கை முறையால் கிடைத்த அழகிய அடைமொழிகளல்ல, உலகை அச்சுறுத்தும் ஆபத்துகள். பெங்களூர் போன்ற நகரங்களில் வளர்ச்சிப் பணிகள் என்ற போர்வையில் ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டி சாய்க்கப்படுகின்றன. இதை எதிர்த்து போராட்டம் நடத்துவதைவிட ஒவ்வொருவரும் ஒரு மரக்கன்றுகள் நடுவேண்டும் என்பதை உணர்ந்தேன்.

2005-ம் ஆண்டு முதல் ரஜனட் யெக்னேஸ்வரன் என்ற பெயரில் அறக்கட்டளை துவங்கி அதன்மூலம் தினமும் மரக்கன்றுகளை நட்டுவருகிறேன். பெங்களூரை சுற்றி 30 கிலோ மீட்டர் பரப்பளவில் மட்டும் மரக்கன்று நடும் பணி மேற்கொள்ளப்பட்டது. இப்போது 100 கிலோ மீட்டர் அளவுக்கு விரிவாக்கியிருக்கிறேன். மரக்கன்று நட்டுவிட்டு, விட்டுவிடுவதில்லை. அவை மரமாகும் வரை பராமரிக்கவும் செய்கிறேன். துவக்க காலத்தில்,

பெங்களூர் மாநகராட்சி மற்றும் வனத்துறையுடன் இணைந்து மரமக்கன்று நடும் பணியில் ஈடுபட்டேன். தற்போது ஜ்ஜ்ஜ்.ற்ழ்ங்ங்ள்ச்ர்ழ்ச்ழ்ங்ங்.ர்ழ்ஞ் என்ற இணையதளத்தின் மூலம் தன்னார்வ தொண்டர் படையை உருவாக்கி,

தினமும் மரக்கன்றுகளை நட்டுவருகிறேன்.

 தினமொன்று பிறந்தால் மரமொன்று நடுவது தான் என் முழுநேரப்பணி. பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள்,

மருத்துவமனை, குடியிருப்பு வளாகங்கள், சாலையோரம், வீடுகள் உள்பட எந்த இடத்தில் வேண்டுமானாலும் மரக்கன்றுகளை நட்டு, பராமரிக்கும் பணியை செய்வோம். மரக்கன்றுகளை இலவசமாக நடுகிறோம். ஆனால், அதற்கு இடத்தை மட்டும் ஒதுக்க வேண்டும். இடம் கொடுக்க இயலாதவர்கள் அல்லது மரக்கன்றுகள் நடுவதில்

ஆர்வமாக இருப்பவர்கள் ஒரு மரக்கன்றுக்கு ரூ.100 செலுத்தி மரக்கன்று தானம் செய்யலாம். இப்பணியில் கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களை ஈடுபடுத்தி கொள்ளலாம்.

 மரக்கன்றுகள் நடுவது, தண்ணீர் ஊற்றி பராமரிக்கும் பணியில் எல்லா தரப்பினரும் தன்னார்வ தொண்டர்களாக எங்களுடன் இணைந்து செயல்படலாம். கர்நாடகத்தில் எந்த பகுதியில் வசிப்போரும் இதில் பங்கு கொள்ளலாம்.

நவம்பர் 1ம் தேதி அன்று அறக்கட்டளை துவக்கி ஐந்தாண்டுகள் நிறைவடைந்தததை முன்னிட்டு பெங்களூரில் ஆயிரம்

மரக்கன்றுகளை நட்டோம். சிக்பளாப்பூர் மாவட்டம், சிந்தாமணி தாலுகா, ராச்சபுரா கிராமத்தில் விவசாயிகள் பயனடைவதற்காக பழமரக்கன்றுகளை நட்டோம். மரம் நடும் பணியில் பள்ளிக்குழந்தைகளையும் ஈடுபடுத்தி வருகிறோம்.

இளைஞர்கள் அதிகளவில் ஆர்வம் காட்டி பங்கு கொள்கிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு 9845449703 எண்ணில் எங்களை தொடர்புகொள்ளலாம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மிகவும் அழுத்தம் நிறைந்த போட்டியில் விளையாடவுள்ளோம்; இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர்!

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் வெடித்த மோதல்: ஜம்மு காஷ்மீர் கேப்டனுக்கு 50% அபராதம்?

தேவா குரலில் வெளியான ஜெய்யின் புதிய படத்தின் பாடல்! இணையத்தில் வைரல்!

காலையில் எழுந்தவுடன் இந்த 5 விஷயங்களைச் செய்யுங்கள்!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!

SCROLL FOR NEXT