ம.ஜனதாதளத்துடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் தலைவர் எதிர்ப்பு
பெங்களூர், ஜன. 8: மாவட்ட, தாலுகா பஞ்சாயத்துகளின் நிர்வாகத்தைப்பிடிக்க மதச்சார்பற்ற ஜனதாதள கட்சியுடன் கூட்டணி சேரக்கூடாது என்று சட்ட மேலவை முன்னாள் துணைத் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமா
பெங்களூரும.ஜனதாதளத்துடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் தலைவர் எதிர்ப்பு
பெங்களூர், ஜன. 8: மாவட்ட, தாலுகா பஞ்சாயத்துகளின் நிர்வாகத்தைப்பிடிக்க மதச்சார்பற்ற ஜனதாதள கட்சியுடன் கூட்டணி சேரக்கூடாது என்று சட்ட மேலவை முன்னாள் துணைத் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமா
பெங்களூர், ஜன. 8: மாவட்ட, தாலுகா பஞ்சாயத்துகளின் நிர்வாகத்தைப்பிடிக்க மதச்சார்பற்ற ஜனதாதள கட்சியுடன் கூட்டணி சேரக்கூடாது என்று சட்ட மேலவை முன்னாள் துணைத் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான பி.ஆர்.பாட்டீல் தெரிவித்தார்.
பெங்களூரில் சனிக்கிழமை செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். பாட்டீல் மேலும் கூறியதாவது: 2004 சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சி ம.ஜனதாதளத்துடன் சேர்ந்து ஆட்சி அமைத்தது. அந்த அரசு சுமுகமாக நடந்து கொண்டிருந்த நிலையில் காங்கிரஸ் தலைமையிலான அரசை கவிழ்த்துவிட்டு பாஜகவுடன் சேர்ந்து ஆட்சி அமைத்தது ம.ஜதளம். பிறகு அந்த அரசையும் கவிழ்த்தது. இவ்வாறு அதிகார ஆசை பிடித்த தலைவர்கள்தான் முன்னாள் பிரதமர் தேவகெüடாவும் அவரது மகன்களும்.
இப்போது சில மாவட்ட, சில தாலுகா பஞ்சாயத்துகளில் நிர்வாகத்தைப் பிடிப்பதற்காக அக்கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டால் இடையில் கைவிட்டு பாஜக உறுப்பினர்களுடன் சேர்ந்து மாவட்ட நிர்வாகத்தை கைப்பற்றிவிடும். இதற்கு முன் பல்வேறு சந்தர்ப்பங்களில் காங்கிரஸ் கட்சி இதை அனுபவித்துள்ளது. சித்தராமையா முதல்வராக வாய்ப்பு வந்தபோது அதைத் தடுத்தவர் தேவகெüடா. கெüடா சந்தர்ப்பவாதி. அவரது கட்சியுடன் கூட்டணி வைப்பது தற்கொலைக்கு சமம். எனவே ம.ஜனதாதளத்துடன் கூட்டணி வைப்போம் என அறிவித்துள்ளதை காங்கிரஸ் தலைவர்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.