புனித வளனார் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாட்டம்
பெங்களூர், ஜன. 8: புனித வளனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பெங்களூர் சாந்திநகர் பகுதியில் அமைந்துள்ள புனித வளனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்ச் சங்
பெங்களூர், ஜன. 8: புனித வளனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
பெங்களூர் சாந்திநகர் பகுதியில் அமைந்துள்ள புனித வளனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்ச் சங்கத்தின் சார்பில் பொங்கல் விழா சனிக்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் ஆம்ப்ரோஸ் பின்டோ தலைமை வகித்தார். கல்லூரி மாணவர் தமிழ்ச் சங்கப் பிரதிநிதி ஜெர்ரி வரவேற்றார்.
கல்லூரி வளாகம் முழுவதும் மாவிலை தோரணங்கள், கரும்பு, வண்ணக்கோலங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
விழாவில் மாணவ, மாணவிகள் கரகாட்டம், தப்பாட்டம், பறையாட்டம் போன்ற கிராமியக் கலைகளை நிகழ்த்தினர். ஆம்ப்ரோஸ் பின்டோ சிறப்புரை ஆற்றினார். தமிழ்த் துறைத் தலைவர் சரசு நன்றி கூறினார்.