பெங்களூரு

மெட்ரோ ரயில் கனவு இன்று நனவாகிறது

பெங்களூர், அக். 19: பெங்களூர் மக்களின் மெட்ரோ ரயில் கனவு, வியாழக்கிழமை (அக். 20) நனவாகப்போகிறது. பெங்களூரின் வளர்ச்சி, மக்கள்தொகைப் பெருக்கத்தை கருத்தில் கொண்டும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் ம

ந.முத்துமணி

பெங்களூர், அக். 19: பெங்களூர் மக்களின் மெட்ரோ ரயில் கனவு, வியாழக்கிழமை (அக். 20) நனவாகப்போகிறது.

பெங்களூரின் வளர்ச்சி, மக்கள்தொகைப் பெருக்கத்தை கருத்தில் கொண்டும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் மெட்ரோ ரயில் திட்டத்துக்கான கனவுக்கரு 1982-ல் விதைக்கப்பட்டது.

இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய அப்போதைய காங்கிரஸ் அரசு குழு ஒன்றை அமைத்தது. அந்த குழு அளித்த அறிக்கையின்படி, இத்திட்டத்தை செயல்படுத்த அடுத்தடுத்து வந்த மாநில அரசுகள் அடிப்படை ஆய்வுப்பணிகளை மேற்கொண்டன. 2005 மார்ச் மாதத்தில் கர்நாடக அரசு இத்திட்டத்துக்கு முழு வடிவம் கொடுத்தது.

2006 ஏப்ரலில் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. 2006 ஜூன் 24-ம் தேதி பிரதமர் மன்மோகன்சிங் இத்திட்டத்துக்கான அடிக்கல் நாட்டினார்.

முதற்கட்ட திட்டப்பணிகள்: ரூ.12 ஆயிரம் கோடியில் 42.30 கி.மீ., தூரம் கொண்ட முதற்கட்ட திட்டத்தில் சிட்டி ரயில் நிலையம், விதானசெüதா, மெஜஸ்டிக், சிட்டி மார்க்கெட் வரையிலான 8.822 கி.மீ., தூரத்துக்கு சுரங்க ரயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மீதமுள்ள தொலைவு முழுவதும் மேம்பாலம் அமைக்கப்படுகிறது. முதற்கட்ட திட்டத்தில் 41 நவீன சொகுசு ரயில் நிலையங்கள் கட்டப்படுகின்றன.

தொடங்கப்படும் சேவை: முதற்கட்ட திட்டத்தில் கிழக்கு-மேற்கு முதல் பிரிவில் பையப்பனஹள்ளி முதல் மகாத்மாகாந்தி சாலை வரையிலான 6.7 கி.மீ., வழித்தடத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து, வியாழக்கிழமை (அக். 20) மெட்ரோ ரயில் சேவை தொடங்குவதற்கு தயார் நிலையில் உள்ளன.

பையப்பனஹள்ளியில் இருந்து சுவாமி விவேகானந்தா சாலை, இந்திரா நகர், அல்சூர், டிரினிட்டி சதுக்கம் வழியாக மகாத்மாகாந்தி சாலை ரயில் நிலையத்தை மெட்ரோ ரயில் சென்றடையும்.

மெட்ரோவை இணைக்கும் பேருந்து சேவைகள்: மகாத்மாகாந்தி சாலை, டிரினிட்டி சதுக்கம், அல்சூர், இந்திரா நகர், எஸ்.வி.சாலை, பையப்பனஹள்ளி மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து இணைப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

கட்டண அட்டை விவரம்

கட்டண அட்டை வாங்கும் இடங்கள்: அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்கள், ஏர்டெல் ரீசார்ஜ் கடைகள், எஸ்பிஐ வங்கிக் கிளைகளில் கட்டண அட்டை பெறலாம். ள்ம்ஹழ்ற்ஸ்ரீஹழ்க்.க்ஷம்ழ்ஸ்ரீ.ஸ்ரீர்.ண்ய் என்ற இணையதளத்திலும் அணுகலாம்.

அட்டை விலை: ரூ. 50 (திரும்பப் பெறத்தக்கதல்ல).

வார்ஷிக் அட்டை: ரூ.1500 வரை கட்டணங்களை சேமித்து வைக்கலாம். ரூ.50 பெருக்கல் தொகையில் அட்டையை டாப்-அப் செய்யலாம். இது ஓராண்டு செல்லத்தக்கது.

சஞ்சார் அட்டை: பயணங்களின் அடிப்படையில் வாங்கலாம். 10 பயணங்கள் (ஒரு மாதத்துக்கு), 40 மற்றும் 50 பயணங்கள் (3 மாதத்துக்கு), 100 பயணங்கள் (6 மாதத்துக்கு செல்லுபடியாகும் அட்டைகள்) கொண்ட அட்டைகளை முன்னரே வாங்கிக்கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜமா இயக்குநரின் புதிய பட போஸ்டர்!

எதிர்க்கட்சியின் போராட்டத்தில் காயமடைந்த கேரள அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி!

பாரிஜாதம் தொடரின் புதிய நாயகன் அக்‌ஷய் கமல்!

நல்லகண்ணு மறைவு: குடியரசு துணைத் தலைவர் இரங்கல்!

அக்‌ஷர் படேல் பிளேயிங் லெவனில் இடம்பெற வேண்டும்: ரவி சாஸ்திரி

SCROLL FOR NEXT