பெங்களூரு

அடுத்த 24 மணி நேரத்தில் கர்நாடகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு

DIN

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து, அடுத்த 24 மணி நேரத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது என பெங்களூரு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பெங்களூரு வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி: கர்நாடகத்தின் தென்மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கடலோர கர்நாடகத்தில் பரவலாகவும், வட கர்நாடகத்தின் உள்பகுதிகளின் ஒருசில பகுதிகளிலும் மழை பெய்தது. கடந்த 24 மணி நேரத்தில் ஆகும்பேவில் அதிகபட்சமாக 160 மி.மீ. பதிவாகியுள்ளது. சிக்மகளூரு மாவட்டத்தின் சிருங்கேரியில் 90 மி.மீ, வட கன்னட மாவட்டத்தின் அங்கோலா, கார்வாட், குடகு மாவட்டத்தின் மடிக்கேரி, சிக்மகளூரு மாவட்டத்தின் கொட்டிகேஹரா, கம்மரடியில் தலா 70 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
வானிலை முன்னறிவிப்பு
அடுத்த 24 மணி நேரத்தில் அதாவது ஆக.14-இல் கடலோர கர்நாடகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மிதமானது முதல் பலத்த மழை பெய்யக்கூடும். அதேபோல, கர்நாடகத்தின் தெற்கு மற்றும் வடக்கு உள்பகுதிகளின் பெரும்பாலான பகுதிகளில் லேசானதுமுதல் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்தில் கடலோர கர்நாடகத்தின் அனைத்து மாவட்டங்கள், தென் கர்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மிதமானது முதல் கனமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. வட கர்நாடகத்தின் உள்பகுதிகளில் உள்ள ஒருசில மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
தென்மேற்கு பருவமழை வலுப்பெற்று வருவதால், அடுத்த 24 மணி நேரத்தில் கர்நாடகத்தின் கடலோரப் பகுதிகளில் வடமேற்கு முதல் மேற்கு நோக்கி மணிக்கு 45-55 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் வாய்ப்புள்ளது. கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால், மீனவர்கள் கடலுக்குள் செல்லவேண்டாம் என எச்சரிக்கப்படுகிறார்கள்.
பெங்களூரில் மழை
அடுத்த 48 மணி நேரத்தில் பெங்களூருவில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த 2 நாள்களில் பெங்களூரில் தட்பவெப்பம் அதிகபட்சமாக 28 டிகிரி மற்றும் குறைந்தபட்சமாக 20 டிகிரி செல்சியசாக இருக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT