பெங்களூரு

பகுதிநேர விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

DIN

பெங்களூரு பல்கலைக்கழகத்தில் பகுதிநேர விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து பெங்களூரு பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
பெங்களூரு பல்கலைக்கழகத்தின் வணிகப் படிப்பு துறையில் பகுதிநேர விரிவுரையாளர்களாக பணியாற்ற தகுதியான ஆள்கள் தேவைப்படுகிறார்கள். குறிப்பாக ஐந்தாண்டுகள் ஒருங்கிணைந்த பட்டப்படிப்பான பிஎம்எஸ், எம்எம்எஸ்/எம்பிஎஸ் முதுநிலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்தும் தகுதி படைத்தவர்களிடம் இருந்து இப்பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தேசிய தகுதித்தேர்வு, மாநில தகுதித்தேர்வுகளில் தேர்ச்சி பெற்றோர், வணிகப் படிப்பில் முதுநிலை பட்டப்படிப்பு படித்தோர், ஆசிரியப் பணியில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இப்பணிக்கு தேவையான கல்வித்தகுதி உள்ளிட்ட விவரங்கள் குறித்து  இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஆக.21-ஆம் தேதிக்குள் தலைவர், வணிகப் படிப்பு துறை, பெங்களூரு-560009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். மேலும் விவரங்களுக்கு 080-22961965 என்ற தொலைபேசி எண்ணை அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT