பெங்களூரு

சிறப்பாக பணியாற்றுவதில் கர்நாடக  போலீஸார் முதலிடம்

தினமணி

தேசிய அளவில் சிறப்பாக பணியாற்றுவதில் கர்நாடக போலீஸார் முதலிடம் வகித்து வருவதாக உள்துறை அமைச்சர் ராமலிங்கரெட்டி தெரிவித்தார்.
பெங்களூரில் புதன்கிழமை அதிரடிப் படை காவலர் பயிற்சி நிறைவு விழாவில் கலந்து கொண்டு அவர் பேசியது: மாநில அளவில் 1 லட்சம் போலீஸார், பணியாற்றி வருகின்றனர். அவர்களின் கடும் உழைப்பினால் சட்டம் ஒழுங்கு பேணிக் காக்கப்படுகிறது. மக்கள் தொகை அதிகரித்து வருவதற்கேற்ப, குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. சைபர் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. இதனை தடுக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்றார்.
மேலும் கடந்த நான்கரை ஆண்டுகளில் 11 ஆயிரம் வீடுகள் போலீஸாருக்கு கட்டித்தரப்பட்டுள்ளது. 2020-ஆம் ஆண்டுக்குள் மேலும் 4 ஆயிரம் வீடுகள் கட்டித்தர இலக்கு நிர்ணயித்துள்ளோம். போலீஸ் காவலர்கள் தேவையான அடிப்படை கட்டுமான வசதிகள் செய்து தரவும் ஆலோசித்து வருகிறோம். கர்நாடக அதிரடிப்படையில் 9 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். அதில் காவலர்களின் பலர் பட்டதாரிகள் என்பது பாராட்டுதலுக்குரியது என்றார்.நிகழ்ச்சியில் டிஜிப் நீலமணி என்.ராஜு, கர்நாடக அதிரடிப்படை ஏஜிடிபி பாஸ்கர்ராவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

SCROLL FOR NEXT