தாயுடன் விஷம் அருந்திய 2 குழந்தைகள் சாவு
குடும்பத் தகராறில் தாயுடன் விஷம் அருந்திய 2 பெண் குழந்தைகள் உயிரிழந்தனர். தாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
குடும்பத் தகராறில் தாயுடன் விஷம் அருந்திய 2 பெண் குழந்தைகள் உயிரிழந்தனர். தாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தும்கூரு மாவட்டம், சிரா வட்டம், தாவரேகெரே கிராமத்தைச் சேர்ந்தவர் நாகேஷ். இவரது மனைவி சுஹாசினி (30). இவர்களது பெண் குழந்தைகள் வித்யா (9), பவ்யா (5). நாகேஷுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட தகராறில் சுஹாசினி, தனது குழந்தைகள் வித்யா, பவ்யாவுடன் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இவர்களில் வித்யா, பவ்யா உயிரிழந்தனர். சுஹாசினி சிகிச்சை பெற்று வருகிறார்.