பெங்களூரு

சமையலர் கொலை: 14 பேர் கைது

DIN

உருட்டுக் கட்டையால் தாக்கி சமையலர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக, 11 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ஜீத்து சர்கார் (24), பெங்களூரு ராச்சினேஹள்ளியில் தகரக் கொட்டகையில் தங்கி, மான்யதா தொழில்நுட்பப் பூங்காவில் உள்ள உணவகத்தில் சமையலராகப் பணியாற்றி வந்துள்ளார். இவர் சனிக்கிழமை நள்ளிரவு மது அருந்திய நிலையில் கொட்டகையில் தங்கியிருந்த தொழிலாளர்களுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது உருட்டுக் கட்டையால் தாக்கப்பட்ட அவர், பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து சம்பிகேஹள்ளி போலீஸார் வழக்குப் பதிந்து, அஜய் உள்ளிட்ட 11 பேரை கைது செய்தனர்.

மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு
பெங்களூரு மகாலட்சுமி லேஅவுட்டை சேர்ந்த பாக்யம்மாவிடம் (65), ரூ.2.4 லட்சம் மதிப்புள்ள 80 கிராம் தங்கச் சங்கிலியை மர்மநபர்கள் பறித்துச் சென்றுள்ளனர்.
இவர் சனிக்கிழமை மாலை 8-வது முக்கிய சாலையில் நடந்து சென்றார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேர், பாக்யம்மாவின் கழுத்திலிருந்த 80 கிராம் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்றுள்ளனர். புகாரின்பேரில் மகாலட்சுமி லேஅவுட் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

பெண்ணிடம் கைப்பை பறிப்பு
பெங்களூரு விஜயநகர் பைப் லைன் சாலையில், அதே பகுதியைச் சேர்ந்த ரேணுகாவிடம் (27), கைப்பையை பறித்துச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
இவர் சனிக்கிழமை மாலை நடந்து சென்றபோது, கைப்பையில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். அதில், ரூ. 3 ஆயிரம் ரொக்கம், செல்லிடப்பேசி ஆகியன இருந்துள்ளன. புகாரின் பேரில், விஜயநகர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

பெண் தற்கொலை
 பெங்களூரு கோனனகுன்டே தொட்டகல்லசந்திராவைச் சேர்ந்த லீலாவதி (40), தற்கொலை செய்துகொண்டார்.
ஆயத்த ஆடை தொழில்சாலையில் பணிசெய்து வந்த இவர், அண்மையில் தான் செய்து வந்த பணியை விட்டுவிட்டு வீட்டிலிருந்தார். இந்த நிலையில் சனிக்கிழமை வீட்டிலிருந்த லீலாவதி தனது அறையில் தூக்கிட்டு கொண்டாராம். இதில், அவர் இறந்தார்.
புகாரின்பேரில் கோனனகுன்டே போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இளைஞர் தற்கொலை
கேரள மாநிலத்தைச் சேர்ந்த வர்ணம் பூசும் தொழிலாளி சரண்ராஜ் (27), தற்கொலை செய்துகொண்டார்.
பெங்களூரு காஞ்சிராமன் நகரில் வசித்து வந்த. இவர், சனிக்கிழமை தனது வீட்டில் தூக்கிட்டுக் கொண்டாராம். இதில், அவர் இறந்தார். புகாரின்பேரில் கங்கம்மனகுடி போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT