பெங்களூரு

கிருஷ்ணா நதி நீரால் வட கர்நாடகம் வளர்ச்சி அடைந்ததா? முன்னாள் முதல்வர் குமாரசாமி கேள்வி

DIN

கிருஷ்ணா நதி நீரைப் பயன்படுத்தி வட கர்நாடகம் அடைந்த வளர்ச்சி குறித்து  வெள்ளை அறிக்கையை கர்நாடக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று முன்னாள் முதல்வரும்,  மஜத மாநிலத் தலைவருமான எச்.டி. குமாரசாமி வலியுறுத்தினார்.
பெலகாவியில் திங்கள்கிழமை தொடங்கிய சட்டப் பேரவை கூட்டத் தொடரில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது:-
கர்நாடக அரசு வட கர்நாடகத்தை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது.  இதனால் அந்தப் பகுதி வளர்ச்சிப் பணிகளில் மிகவும் பின்தங்கியுள்ளது.  கிருஷ்ணா நதிநீரைப் பயன்படுத்துவதன் மூலம் வட கர்நாடகத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல முடியும் என  அரசு வாக்குறுதி அளித்திருந்தது.  இதன்படி, கிருஷ்ணா நதி நீரைப் பயன்படுத்தி வட கர்நாடகம் அடைந்த வளர்ச்சி குறித்து அரசு வெள்ளை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும்.
பெலகாவியில் நடைபெறும் குளிர்காலக் கூட்டத் தொடரில் மக்களுக்குப் பயனுள்ள திட்டங்களை அமல்படுத்த வேண்டும்.  வட கர்நாடகத்தின் பிரச்னைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வறட்சியால், கடந்த மூன்றரை ஆண்டுகளாக விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.  அவர்களின் பயிர்ச் சேதங்களுக்கு உரிய இழப்பீட்டை கர்நாடக அரசு வழங்க வேண்டும்.  கரும்பு,  மக்காச்சோளம்,  கடலைக்காய்  உள்ளிட்டவற்றுக்கு ஆதரவு விலையை அறிவிக்க வேண்டும்.   சர்க்கரை விலை உயர்ந்துள்ளபோதும்,  கரும்பின் ஆதரவு விலையை உயர்த்தாமல் உள்ளது கண்டனத்துக்குரியது.
இதுகுறித்து மத்திய  அமைச்சர்களைச் சந்திக்க அனைத்துக் கட்சியினர் குழுவை அழைத்து செல்வதாக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.  இதற்கான தேதியை அவர் உடனே அறிவிக்க வேண்டும் என்றார் குமாரசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT