முகப்பு
பெங்களூரு

நுண்கலை ஆய்வுக்கு உதவித்தொகை

நுண்கலை சார்ந்த ஆய்வுகளில் ஈடுபடுவோருக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

நுண்கலை சார்ந்த ஆய்வுகளில் ஈடுபடுவோருக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இதுகுறித்து கர்நாடக லலித்கலா அகாதெமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: கர்நாடக லலித்கலா அகாதெமி சார்பில் நுண்கலை சார்ந்த ஆய்வுகளில் ஈடுபடுவோருக்கு ஆண்டுதோறும் ஆய்வு, சிறப்பு சாதனையாளர் ஆய்வுப் பிரிவுகளின்கீழ் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இந்த உதவித்தொகையைப் பெற நுண்கலை ஆய்வில் ஈடுபட விரும்பும் பழங்குடியினரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நுண்கலையில் ஏதாவது ஒருபிரிவில் ஆய்வுப் பணிகளை ஓராண்டுக்கு மேற்கொள்ள வேண்டும்.
ஆய்வுப் பணி குறித்து 4-5 பக்கங்களில் குறிப்புடன் விண்ணப்பங்களை அனுப்பிவைக்க வேண்டும். பழங்குடியினரில் மொத்தம் 10 பேருக்கு ஆய்வு உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஆய்வு உதவித்தொகையாக ரூ.1 லட்சம் மூன்று தவணைகளாக தரப்படும்.  மேலும் விவரங்களுக்கு w‌w‌w.‌l​a‌l‌i‌t‌h‌k​a‌l​a‌k​a‌r‌n​a‌t​a‌k​a.‌o‌r‌g  என்ற இணையதளத்திலோ அல்லது 080-22480297 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →