முகப்பு
பெங்களூரு

பேரவையில் பா.ஜ.க.வின் கோரிக்கை ஏற்பு: தர்னா வாபஸ்

டி.எஸ்.பி. கணபதி தற்கொலை சம்பவத்தில் அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் பதவி விலக வலியுறுத்தி, 2-ஆம் நாளாக புதன்கிழமையும் பாஜகவினர் மேற்கொண்ட தர்னா, பேரவைத் தலைவரின் உறுதிமொழியையடுத்து கைவிடப்பட்டது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

டி.எஸ்.பி. கணபதி தற்கொலை சம்பவத்தில் அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் பதவி விலக வலியுறுத்தி, 2-ஆம் நாளாக புதன்கிழமையும் பாஜகவினர் மேற்கொண்ட தர்னா, பேரவைத் தலைவரின் உறுதிமொழியையடுத்து கைவிடப்பட்டது.
பெலகாவியில் உள்ள சுவர்ண விதான செளதாவில் புதன்கிழமை பேரவைக் கூடியதும்  எதிர்க்கட்சித் தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர், "டிஎஸ்பி எம்.கே.கணபதி தற்கொலை வழக்கை விசாரித்து வரும் சிபிஐ, பெங்களூரு வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜை முதல்குற்றவாளியாக குறிப்பிட்டு தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளது. எனவே, அவர் தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும். இந்த விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரும் பாஜகவின் ஒத்திவைப்பு தீர்மானத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும்' என்றார்.
இதைத் தொடர்ந்து, 2-ஆம் நாளாக பேரவைத் தலைவர் இருக்கை முன் கூடிய பாஜக எம்எல்ஏக்கள் ஷெட்டரின் கோரிக்கையை ஏற்க வலியுறுத்தி தர்னாவில் ஈடுபட்டனர். இதற்குப் பதிலளித்துப் பேசிய பேரவைத் தலைவர் கே.பி.கோலிவாட்,  "இப் பிரச்னைகுறித்து பாஜகவினர் கொண்டுவந்துள்ள ஒத்திவைப்பு தீர்மானத்துக்கு அனுமதி அளிக்க முடியாது. மாறாக, இந்த விவகாரம் தொடர்பாக வேறொரு சட்டப் பிரிவின்கீழ் விவாதிக்க அனுமதிப்பேன்' என்றார். இதையடுத்து, பேரவைத் தலைவரிடம் வேறொரு சட்ட விதிகளின் கீழ் அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் மீது சிபிஐ வழக்குத் தொடர்ந்துள்ளது குறித்து விவாதிக்க அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, பாஜவினர் தங்களது தர்னாவை கைவிட்டு இருக்கையில் அமர்ந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →