பெங்களூரு

மாநகராட்சி மருத்துவமனைகளில் மன அழுத்த சிகிச்சை: மேயர் சம்பத்ராஜ்

DIN

மாநகராட்சி மருத்துவமனைகளில் மன அழுத்தத்திற்கான சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என பெங்களூரு மேயர் சம்பத்ராஜ்
தெரிவித்தார்.
பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை உலக மனநல சுகாதாரத்தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசியது:  நவீன வாழ்க்கை முறையால் பலர் மன அழுத்ததிற்கு ஆளாகின்றனர். மன அழுத்திற்கு ஆளானவர்களுக்கு சிகிச்சை அளிக்க, மாநகராட்சி மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்.
மனஅழுத்தத்திற்கு சிகிச்சை அளிக்க பயிற்சி பெரும் மருத்துவர்கள், தங்களிடம் வரும் நோயாளிக்கு, மன அழுத்தம் போக்குவதற்கான சிகிச்சை அளிப்பார்கள் என்றார். நிகழ்ச்சியில் துணை மேயர் பத்மாவதி நரசிம்மமூர்த்தி, மனநல மருத்துவர் விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனவு இதுவோ..!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

SCROLL FOR NEXT