பெங்களூரு

மூடநம்பிக்கை தடுப்பு சட்ட மசோதாவை அமல்படுத்த ஆலோசனை: அமைச்சர் காகோடு திம்மப்பா

DIN

கர்நாடகத்தில் மூடநம்பிக்கை தடுப்பு சட்ட மசோதாவை அமல்படுத்த அரசு ஆலோசித்து வருவதாக அந்த மாநில வருவாய்த் துறை அமைச்சர் காகோடு திம்மப்பா தெரிவித்தார்.
இதுகுறித்து வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
பொதுமக்களிடம் அதிகரித்து வரும் மூடநம்பிக்கையை தடுக்க வேண்டியது அரசின் கடமையாகும். மக்களின் அறியாமையை பயன்படுத்திக் கொள்ளும் ஒரு சிலர், தங்களின் சுயநலத்திற்காக மோசடிகளில் ஈடுபட்டு வருவது கவலை அளிக்கிறது. எனவே, வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் மூடநம்பிக்கை தடுப்பு சட்டமசோதாவை தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளோம்.
அது பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவை பெறும் என நம்பிக்கை உள்ளது. ஊழல்தடுப்பு சட்டமசோதா நிறைவேற்றப்பட்டவும், அதனை விரைந்து அமல்படுத்த அரசு ஆலோசித்து வருகிறது. மூடநம்பிக்கையைத் தடுக்க வேண்டும் என்றால் அதுகுறித்து பேசிக் கொண்டிருப்பதைவிட, செயல் வடிவத்தில் கொண்டு வருவதன் மூலமே அதனை தடுக்க
முடியும்.
மூடநம்பிக்கை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். அதன்மூலம் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வது அவசியம்.
மேலும் நகரங்கள், கிராமங்களில் சட்ட விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள வீடுகளை, விதிமுறைகளுக்குள் கொண்டு வரும் பணியைத் தொடங்கியுள்ளோம். இதுதொடர்பாக 5.4 லட்சம் கோரிக்கை மனுக்கள் வந்துள்ளன. அதில் 2.61 லட்சம் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT