பெங்களூரு

பேருந்து நிலையத்துக்கு பெரியார் பெயர்: அமைச்சருக்கு பாராட்டு

DIN

பெங்களூரில் உள்ள ஒரு பேருந்து நிலையத்துக்கு தந்தை பெரியாரின் பெயரை சூட்ட இருப்பதாக அறிவித்த உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டிக்கு கர்நாடக மாநில திமுக பாராட்டு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கர்நாடக மாநில திமுக அமைப்பாளர் ந.இராமசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: பெங்களூரில் செப்.15-ஆம் தேதி தலித் சங்கர்ஷ சமிதி அமைப்பின் சார்பில் நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவில் பங்கேற்று பேசிய உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, பெங்களூரில் உள்ள பேருந்து நிலையத்துக்கு தந்தை பெரியாரின் பெயர் சூட்டப்படும் என்று அறிவித்துள்ளார். அமைச்சர் ராமலிங்க ரெட்டியின் அறிவிப்பை முழுமனதோடு வரவேற்பதோடு, அவரை மனதார பாராட்டுகிறோம். தமிழகத்தில் சமூக புரட்சிக்கு வித்திட்ட தந்தை பெரியார், தீண்டாமை மற்றும் ஜாதி ஒழிப்புக்கு தீவிரமாக பாடுபட்டவர். இதுபோன்ற எண்ணற்ற சமூக புரட்சிக்கு வித்திட்ட தந்தை பெரியாரின் பெயரை பேருந்து நிலையத்துக்கு சூட்ட எடுத்திருக்கும் முடிவை கர்நாடக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம். கர்நாடகத்தில் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை கொண்டுவர முதல்வர் சித்தராமையா எடுத்துள்ள முயற்சிக்கு கர்நாடக மாநில திமுக துணைநிற்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்கும் குருப்பெயர்ச்சி பலன்கள்!

பன்னுன் கொலை முயற்சி பின்னணியில் இந்திய புலனாய்வு அதிகாரிகள்: வாஷிங்டன் போஸ்ட்

ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினருக்கு சம்மன்!

வாக்கு எண்ணிக்கை மைய வளாகத்துக்குள் அத்துமீறி நுழைய முயன்ற இளைஞரால் பரபரப்பு!

‘எங்கேயும் எப்போதும்..’

SCROLL FOR NEXT