முகப்பு
பெங்களூரு

மகதாயி விவகாரம்: பிரதமர் மெளனம் காப்பது சரியல்ல: இலக்கியவாதி சந்திரசேகர் பாட்டீல்

மகதாயி விவகாரத்தில் பிரதமர் மெளனம் காப்பது சரியல்ல என்று இலக்கியவாதி சந்திரசேகர் பாட்டீல் தெரிவித்தார்.

பெங்களூரு

மகதாயி விவகாரம்: பிரதமர் மெளனம் காப்பது சரியல்ல: இலக்கியவாதி சந்திரசேகர் பாட்டீல்

மகதாயி விவகாரத்தில் பிரதமர் மெளனம் காப்பது சரியல்ல என்று இலக்கியவாதி சந்திரசேகர் பாட்டீல் தெரிவித்தார்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:10 PM
பகிர்:

மகதாயி விவகாரத்தில் பிரதமர் மெளனம் காப்பது சரியல்ல என்று இலக்கியவாதி சந்திரசேகர் பாட்டீல் தெரிவித்தார்.
பெங்களூரு சுதந்திரப் பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை மகதாயி விவகாரத்தில் பிரதமரை தலையிட வலியுறுத்தி வெகுஜன மக்கள் கட்சி சார்பில் நடைபெற்றுவரும் தொடர் போராட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசியது:  பிரதமர் நரேந்திர மோடி மனதின் குரல் நிகழ்ச்சிக்கு காட்டும் ஆர்வத்தை, மகதாயி விவகாரத்தில் காட்ட வேண்டும்.  மகதாயி ஆற்று நீர் பிரச்னையால் வட கர்நாடக மக்கள் குடிநீர் இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.  அதில் தலையிடுமாறு பிரதமரை தொடர்ந்து வலியுறுத்து வருகிறோம். என்றாலும் அவர் தலையிட மறுத்து வருகிறார்.  மகதாயி விவகாரத்தில் பிரதமர் தொடர்ந்து மெளனம் காப்பது சரியல்ல.  கடந்த 3 ஆண்டுகளாக மகதாயி விவகாரம் தொடர்பாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  கோவா,  மகாராஷ்டிரம்,  கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த 3 முதல்வர்களை அழைத்து பிரதமர் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்.  
     மகதாயி விவகாரத்தில் பிரதமர் தொடர்ந்து மெளனமாக இருந்தால்,  எதிர்காலத்தில் கன்னட,  விவசாய சங்கங்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம் என்றார்.  போராட்டத்தில் வெகுஜன மக்கள் கட்சியின் தலைவர் ஐயப்பா,  சதீஷ்,  நாகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →