முகப்பு
பெங்களூரு

கொள்ளை முயற்சி: 3 பேர் கைது

கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:10 PM
பகிர்:

கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
பெங்களூரு பார்வதிபுராவைச் சேர்ந்தவர் பவன் (29),  கெம்பே கெளடாநகரைச் சேர்ந்தவர்கள் ராஜேஷ் (33),  நவீன் (23).  இவர்கள் 3 பேரும் இணைந்து ஹனுமந்தநகர் காவல் சரகம் ஸ்ரீராமாஞ்சநேயா குட்டதசாலை,  கோபாலகிருஷ்ணா சாலையில் ஆயுதங்களுடன் கொள்ளையடிக்கத் திட்டமிட்டு பதுங்கியிருந்தனராம்.  இது குறித்து தகவல் அறிந்த போலீஸார் அங்கு சென்று,  3 பேரையும் கைது செய்தனர்.  அவர்களிடமிருந்து கத்தி,  உருட்டுக்கட்டை,  3 செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்தனர். இது குறித்து ஹனுமந்தநகர் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →