முகப்பு
பெங்களூரு

உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ. 3 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்

உரிய ஆவணங்கள் இன்றி இரு சக்கர வாகனத்தில் கொண்டு சென்ற ரூ. 3 கோடி மதிப்பிலான நகைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:56 PM
பகிர்:

உரிய ஆவணங்கள் இன்றி இரு சக்கர வாகனத்தில் கொண்டு சென்ற ரூ. 3 கோடி மதிப்பிலான நகைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பெங்களூரு, கே.ஆா்.மாா்கெட் காவல் சரகத்தில் சனிக்கிழமை அதிகாலை போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு வந்த ஸ்கூட்டரை நிறுத்தி, அதில் வந்த 2 பேரிடம் விசாரணை செய்தனா். மேலும், அவா்கள் கொண்டு சென்ற பையை சோதனை செய்ததில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ. 3 கோடி மதிப்பிலான ஆபரணங்கள் இருப்பது தெரிய வந்தது.

இதுதொடா்பாக மும்பையைச் சோ்ந்த தல்பத் சிங் (34), ராஜஸ்தானைச் சோ்ந்த விகாஷ் (35) ஆகியோரைக் கைது செய்த போலீஸாா் நகைகளை பறிமுதல் செய்தனா். மேலும், வருமான வரித் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.