பெங்களூரு: வெளிநாடுகளிலிருந்து வருபவர்களுக்கு 7 நாள் கட்டாய தனிமை
'ஒமைக்ரான்’ அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளிலிருந்து பெங்களூரு வருபவர்கள் 7 கட்டாய தனிமையில் வைக்கப்படுவார்கள் என அம்மாநில சுகாதாரத் துறை அதிகாரி தெரிவித்திருக்கிறார்.
'ஒமைக்ரான்’ அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளிலிருந்து பெங்களூரு வருபவர்கள் 7 கட்டாய தனிமையில் வைக்கப்படுவார்கள் என அம்மாநில சுகாதாரத் துறை அதிகாரி தெரிவித்திருக்கிறார்.
இதையும் படிக்க | ஒமைக்ரான் ஏற்கனவே இந்தியாவுக்குள் நுழைந்திருக்கலாம்: மருத்துவர்
கரோனா தொற்றின் தாக்கமே குறையாத நிலையில் புதிய வகை ‘ஒமைக்ரான்’ தொற்றால் மீண்டும் உலகம் முழுவதும் பதற்றநிலை உருவாகி வருகிறது.
குறிப்பாக தென் ஆப்பிரிக்கா , இஸ்ரேல் நாடுகளில் உருமாறிய கரோனா (ஒமைக்ரான்) தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. கரோனாவைக் காட்டிலும் இந்தவகை தொற்று 5 மடங்கு அதிகமாக பரவும் அபாயம் இருப்பதால் பல நாடுகளில் பயணிகளுக்கு தீவிர பரிசோதனை நடந்து வருகிறது.
இந்நிலையில் தெ.ஆப்பிரிக்காவிலிருந்து கர்நாடகம் வந்த 2 பயணிகளுக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து பெங்களூரு கிராமப்புற மாவட்ட சுகாதார அதிகாரி திப்பேசுவாமி ’ வெளிநாட்டிலிருந்து பெங்களூரு வரும் பயணிகள் கட்டாயமாக 7 நாள் தனிமையில் வைக்கப்படுவார்கள்’ எனத் தெரிவித்திருக்கிறார்.