முகப்பு
பெங்களூரு

காங்கிரஸில் இருந்து விலகும் எண்ணமில்லை: அம்பரீஷ்

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகும் எண்ணமில்லை என்று முன்னாள் அமைச்சர் அம்பரீஷ் தெரிவித்தார்.

Updated On : 9 ஏப்ரல், 2018 at 7:55 AM
பகிர்:

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகும் எண்ணமில்லை என்று முன்னாள் அமைச்சர் அம்பரீஷ் தெரிவித்தார்.
பெங்களூரில் அவர் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: -
அண்மைக்காலமாக காங்கிரஸ் கட்சியிலிருந்து நான் (அம்பரிஷ்) விலக உள்ளதாக வதந்திகள் பரவி வருவதில்,  உண்மையில்லை.   பதவி, கெளரவம் உள்ளிட்ட எல்லாவற்றையும் அளித்த காங்கிரஸில் இருந்து விலகும் எண்ணமில்லை.
அரசியல் வாழ்க்கையில் பல்வேறு  ஏற்றத் தாழ்வுகளைச் சந்தித்துள்ளேன்.  எதைப் பற்றியும் அதிகம் கவலை கொள்ள மாட்டேன். 
மண்டியா தொகுதியிலிருந்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடுவதா?  அல்லது அரசியலிருந்து விலகி இருப்பதா என்பது குறித்து விரைவில் முடிவு எடுப்பேன் என்றார் அவர். 
பாஜக பிரமுகரும், நடிகருமான கிருஷ்ணம் ராஜுவை ஹைதராபாத்தில் அம்ரீஷ் அண்மையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.  இதனைத் தொடர்ந்து, அம்பரீஷ் பாஜகவில் இணைய உள்ளதாக வதந்தி பரவியது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.