பெங்களூரு

வேட்புமனு தாக்கல்: அலுவலகப் பகுதிகளில் 144 தடை உத்தரவு

DIN

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 17 முதல் 24-ஆம் தேதி வரை நடைபெறுவதையடுத்து,   வேட்புமனு தாக்கல் செய்யப்படும் அலுவலகங்களைச் சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெங்களூரு மாநகர காவல் ஆணையர் சுனில்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
 கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி ஏப்ரல் 17-ஆம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது.
இதனையொட்டி,  பெங்களூரில் வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் தேர்தல் அலுவலகங்களின் 100 மீட்டர் சுற்றளவில் ஏப்ரல் 17-ஆம் தேதி காலை 6 மணி முதல் 24-ஆம் தேதி மாலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவின்போது, அந்தப் பகுதியில் 5 பேருக்கு மேல் இணைந்து செல்வதோ,  பொதுக்கூட்டம்,  போராட்டம், ஊர்வலம், தர்னா நடத்துவதோ கூடாது. 
இதுதவிர, ஆயுதங்கள், வெடிபொருள்கள் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுனில்குமார் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே விளாசல்

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

‘வெப்பன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் அஞ்சனா...!

காழ்ப்புணர்ச்சியில் வார்த்தைகளை அள்ளி வீசுகிறார் மோடி: செல்வப்பெருந்தகை

SCROLL FOR NEXT