முகப்பு
பெங்களூரு

வேலைவாய்ப்புகளை உருவாக்க முயற்சி

தேசிய அளவில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தோஷிபா குழுமத்தின் மேலாண் இயக்குநர் தகாஷி இஷிகாவா தெரிவித்தார்.

Updated On : 18 ஏப்ரல் 2018, 7:45 am IST
பகிர்:

தேசிய அளவில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தோஷிபா குழுமத்தின் மேலாண் இயக்குநர் தகாஷி இஷிகாவா தெரிவித்தார்.
பெங்களூரில் செவ்வாய்க்கிழமை  செய்தியாளர்களிடம் அவர் கூறியது: சர்வதேச அளவில் நவீன தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் தோஷிபா குழுமம் முன்னணியில் உள்ளது. தேசிய அளவில் பெங்களூரில் தலையிடமாக கொண்டு செயல்படும் எங்கள் குழுமத்தின் சார்பில் மேலும் முதலீடுகளை செய்ய முடிவு செய்துள்ளோம். 
குறிப்பாக இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்க முயற்சியை மேற்கொண்டுள்ளோம். நாட்டின் வளர்ச்சிக்கு இளைஞர்களின் பங்களிப்பு அவசியம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.