முகப்பு
பெங்களூரு

புத்த பூர்ணிமா: இன்று இறைச்சி விற்கத் தடை

புத்த பூர்ணிமாவை முன்னிட்டு, பெங்களூரில் திங்கள்கிழமை இறைச்சி விற்க மாநகராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:53 PM
பகிர்:

புத்த பூர்ணிமாவை முன்னிட்டு, பெங்களூரில் திங்கள்கிழமை இறைச்சி விற்க மாநகராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது.
இதுகுறித்து பெங்களூரு மாநகராட்சி வெளியிட்ட உத்தரவு: கர்நாடகத்தில் திங்கள்கிழமை (ஏப்.30) புத்த பூர்ணிமா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, விலங்குகள் வதை தடைச் சட்டத்தின்கீழ் பெங்களூரு மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ஏப்.30-ஆம் தேதி விலங்குகளை துன்புறுத்தவும், அதன் இறைச்சியை விற்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. 
இந்த உத்தரவை மீறுவோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, இறைச்சி விற்க விதிக்கப்பட்டுள்ள தடையை அனைவரும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →