முகப்பு
பெங்களூரு

மஜதவுக்கு ஆதரவளிக்க வேண்டுகோள்

மஜத ஆட்சியமைக்க மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என அக் கட்சியின் மாநிலத் தலைவர் எச்.டி.குமாரசாமி கேட்டுக் கொண்டார்.

பெங்களூரு

மஜதவுக்கு ஆதரவளிக்க வேண்டுகோள்

மஜத ஆட்சியமைக்க மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என அக் கட்சியின் மாநிலத் தலைவர் எச்.டி.குமாரசாமி கேட்டுக் கொண்டார்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:53 PM
பகிர்:

மஜத ஆட்சியமைக்க மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என அக் கட்சியின் மாநிலத் தலைவர் எச்.டி.குமாரசாமி கேட்டுக் கொண்டார்.
இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: கடந்த 10 ஆண்டுகளாக பாஜக, காங்கிரஸ் கட்சிகளின் ஆட்சிகளை மக்கள் பார்த்துள்ளனர். தேசியக் கட்சிகளின் ஆட்சியில் மாநிலம் வளர்ச்சி பெறமுடியாது என்பதனை மக்கள் உணர்ந்துள்ளனர். எனவே, நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் மாநிலக் கட்சியான மஜதவுக்கு மக்கள் வாய்ப்பளிக்க வேண்டும்.
சட்டப்பேரவைத் தேர்தலில் மக்களின் ஆதரவில் மஜத 113 தொகுதிகளின் வெற்றி பெரும் என்ற நம்பிக்கை உள்ளது. தொங்கு சட்டப்பேரவை ஏற்பட்டால் மஜத கிங்மேக்கராக இருக்கும் என பலரும் கூறி வருகின்றனர். இதில் எனக்கு உடன்பாடில்லை. நடைபெற உள்ள சட்டபேரவைத் தேர்தலில் மஜத பாத்திரம் கிங்மேக்கராக இல்லாமல், கிங்காகவே இருக்கும். 
பாஜக, காங்கிரஸ் அரசுகளின் ஆட்சிகளால் வேதனை அடைந்துள்ள மக்கள், நடைபெற உள்ள தேர்தலில் மஜதவை ஆதரிக்க முடிவு செய்துள்ளனர். மாநிலத்தில் மஜதவுக்கு ஆதரவான அலை வீசி வருகிறது என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →