FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

நிதீஷ் குமார் இல்லம் முன்பு தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்! மாநிலங்களவை எம்.பி. ஆவதற்கு எதிர்ப்பு!!

பிகாரில் முதல்வர் நிதீஷ் குமார் இல்லம் முன்பு தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்...

Updated On : 5 மார்ச் 2026, 10:51 am IST
முதல்வர் நிதீஷ் குமார் இல்லத்திற்கு வரும் எம்எல்ஏ கிருஷ்ணா முராரியின் காரைத் தடுக்கும் கட்சி நிர்வாகிகள்.
பகிர்:

பிகார் முதல்வர் நிதீஷ் குமார் மாநிலங்களவை உறுப்பினராவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது வீட்டின் முன்பு கட்சித் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிகார் முதல்வர் நிதீஷ் குமார் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராவதற்கு வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருக்குப் பதிலாக பாஜக சார்பில் ஒருவர் முதல்வராக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

பிகார் முதல்வர் நிதீஷ் குமாருடன் ஐக்கிய ஜனதா தளத்தின் தேசிய செயல் தலைவர் சஞ்சய் ஜா, அமைச்சர் விஜய் குமார் சௌதரி ஆகியோர் நேற்று (மார்ச் 4) மேற்கொண்ட ஆலோசனையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளக் கட்சியினர் பாட்னாவில் உள்ள அவரது இல்லத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நிதீஷ் குமார் பிகார் முதல்வராகவே தொடர வேண்டும், வேறு யாரும் எங்களுக்கு முதல்வராக வேண்டாம் என்று கோஷங்களுடன் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ராஜீவ் ரஞ்சன் இதுபற்றி கூறுகையில், "நாங்கள் பிகாரின் முதல்வராக நிதிஷ் குமாரை மட்டுமே விரும்புகிறோம். நிதிஷ் குமார் மாநிலங்களவைக்குச் செல்வதை நாங்கள் எதிர்க்கிறோம். பதிலாக அவரது மகன் நிஷாந்த் குமார் மாநிலங்களவைக்குச் செல்ல வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்" என்று தெரிவித்தார்.

எனினும் அது நிதீஷ் குமாரின் முடிவு என்றும் கட்சியினர் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது என்றும் அந்த கட்சியைச் சேர்ந்த சஞ்சய் சிங் கூறினார்.

ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜகவைச் சேர்ந்த பலரும் இதுபற்றி கருத்து தெரிவித்து வருகின்றனர்.

summary

JD(U) members raise slogans against bihar CM Nitish kumar amid Rajya Sabha speculations

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments