மின் கம்பத்தில் லாரி மோதியதில் 3 பேர் பலி
ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மின் கம்பத்தில் லாரி மோதியதில் தொழிலாளிகள் 3 பேர் உயிரிழந்தனர்.
ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மின் கம்பத்தில் லாரி மோதியதில் தொழிலாளிகள் 3 பேர் உயிரிழந்தனர்.
உடுப்பி மாவட்டம், பெரடூரில் ஞாயிற்றுக்கிழமை ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர மின் கம்பத்தில் மோதியது. இதில் மே 1-ஆம் தேதி பிரதமர் மோடி கலந்து கொள்வதற்காக மேடை அமைக்கும் பணிக்கு அழைத்து செல்லப்பட்ட தொழிலாளிகள் சித்ரதுர்காவைச் சேர்ந்த மூர்த்தி, அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த 2 பேர் உள்பட மூவர் நிகழ்விடத்திலே உயிரிழந்தனர். காயமடைந்த 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து ஹிரியடுக்கா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.