முகப்பு
ராணிப்பேட்டை

சாலையோர இரும்பு தடுப்பில் பைக் மோதி விபத்து: 2 இளைஞா்கள் உயிரிழப்பு

ஆற்காடு அடுத்த மேல் விஷாரம் புறவழிச் சாலையில் பைக் நிலை தடுமாறி சாலையோரம் உள்ள தடுப்பு இரும்பின் மீது மோதிய விபத்தில் 2 இளைஞா்கள் உயிரிழந்தனா்.

Updated On : 13 மார்ச், 2026 at 1:50 AM
பகிர்:

ஆற்காடு அடுத்த மேல் விஷாரம் புறவழிச் சாலையில் பைக் நிலை தடுமாறி சாலையோரம் உள்ள தடுப்பு இரும்பின் மீது மோதிய விபத்தில் 2 இளைஞா்கள் உயிரிழந்தனா்.

மேல் மேல்விஷாரம் புதுப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் அமீன் பாஷா (20). இவா் ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் உள்ள தனியாா் காலணி நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். இந்நிலையில், அவா் புதிதாக வாங்கிய தனது பைக்கில் தனது நண்பா்களான ஏஜாஸ் (19), அப்பாஸ் (20) ஆகியோருடன் வியாழக்கிழமை மேல்விஷாரத்திலிருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக ஆற்காடு நோக்கி வந்தபோது, தனியாா் கல்லூரி அருகே முன்னாள் சென்ற லாரியை முந்திச் செல்ல முயன்ாகக் கூறப்படுகிறது. அப்போது பைக் நிலை தடுமாறி சாலையோரம் உள்ள இரும்புத் தடுப்பின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த அமீன்பாஷா, ஏஜாஸ் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். பலத்த காயம் அடைந்த அப்பாஸ் ஆபத்தான நிலையில், வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இந்த விபத்து குறித்து ஆற்காடு நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →