பெங்களூரில் ஜூலை 20-இல் அஞ்சல் சேவைகள் குறைதீர் முகாம்
அஞ்சல் சேவைகள் குறைதீர் முகாம் பெங்களூரில் ஜூலை 20-இல் நடத்தப்படுகிறது.
அஞ்சல் சேவைகள் குறைதீர் முகாம் பெங்களூரில் ஜூலை 20-இல் நடத்தப்படுகிறது.
இதுகுறித்து கர்நாடக அஞ்சல் வட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கர்நாடக அஞ்சல் வட்ட அலுவலக மாநாட்டு அரங்கில் ஜூலை 20-ஆம் தேதி மாலை 3 மணி அளவில் அஞ்சல்சேவைகள் குறைதீர்முகாம் நடத்தப்படுகிறது. பெங்களூரு அரண்மனை சாலையில் உள்ள தலைமை அஞ்சல் அதிகாரி முகாமில் பங்கேற்று குறைகளைக் கேட்டறிகிறார்.
பெங்களூரு மண்டலத்தை சேர்ந்தோர் தங்களது குறைகளை எழுதி, உதவி இயக்குநர் (அஞ்சல் இயக்கம்), தலைமை அஞ்சல் அதிகாரி, கர்நாடக அஞ்சல் வட்ட அலுவலகம், பெங்களூரு-560001 என்ற முகவரிக்கு ஜூலை 15-ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும்.
புகார்களை tech.ka@indiapost.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் அனுப்பலாம். புகார்களுடன் ஆதாரங்களை இணைப்பது நல்லது. மேலும் புகார் கடிதத்தில் தெளிவான தொடர்புமுகவரியை குறிப்பிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.