மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான விருப்பப் பதிவு தொடக்கம்
மருத்துவ மாணவர் சேர்க்கையின் முதல் சுற்றுக்கான விருப்பப் பாடங்கள், விருப்பக் கல்லூரிகளின் பட்டியலை பதிவு செய்யும் நடைமுறை தொடங்கியுள்ளது.
மருத்துவ மாணவர் சேர்க்கையின் முதல் சுற்றுக்கான விருப்பப் பாடங்கள், விருப்பக் கல்லூரிகளின் பட்டியலை பதிவு செய்யும் நடைமுறை தொடங்கியுள்ளது.
இதுகுறித்து கர்நாடகத் தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
2018-19-ஆம் ஆண்டில் மருத்துவம், பல் மருத்துவம் போன்ற மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை பெறுவதற்கு முன்பாக மாணவர்கள் தெரிவு செய்ய விரும்பும் விருப்பப் பாடங்கள், விருப்பக் கல்லூரிகளின் பட்டியல் இணையதளத்தில் பதிவு செய்வது அவசியமாகும்.
சேர்க்கை இடங்களின் கையிருப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 48 மருத்துவக் கல்லூரிகளில் 3,390 அரசு இடங்கள், 1,808 தனியார் இடங்கள், 551 வெளிநாடுவாழ் இடங்கள், 171 பிற இடங்கள் ஆக மொத்தம் 5,920 இடங்கள் உள்ளன. அதேபோல, மொத்தமுள்ள 38 பல் மருத்துவக் கல்லூரிகளில் 928 அரசு இடங்கள், 1,310 தனியார் இடங்கள், 386 வெளிநாடுவாழ் இடங்கள், 130 பிற இடங்கள் ஆகமொத்தம் 2,754 இடங்கள் உள்ளன .
இதற்காக ஜூலை 10-ஆம் தேதி மாலை 5 மணி வரைவிருப்பப் பாடங்கள், விருப்பக்கல்லூரிகளை www.kea.kar.nic.in என்ற இணையதளத்தில் பதிவுசெய்யலாம்.
இதனடிப்படையில், முதல்சுற்றுக்கான இறுதி சேர்க்கை இடங்கள் ஒதுக்கீட்டு பட்டியல் வெளியிடப்படுகிறது. இதற்காக பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து இணையதளத்தில் விளக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.