இந்து பெண் ரமலான் நோன்பு.. வெடித்தது நாசிக் விவகாரம்: துப்புரவு பணியாளர்களாக புலனாய்வில் காவலர்கள்!
இந்து பெண் ரமலான் நோன்பு இருந்தது விசாரணைக்கு உள்படுத்தப்பட்டபோது வெடித்த டிசிஎஸ் நாசிக் விவகாரம் பற்றி..
Updated On : 14 ஏப்ரல், 2026 at 1:09 PM
டிசிஎஸ்-ன் நாசிக் நகரில் இயங்கி வந்த தனியார் பிபீஓ அலுவலகத்தில் துப்புரவுப் பணியாளர்களாக பணியாற்றியபடி காவலர்கள் பல்வேறு விவகாரங்களில் புலனாய்வு செய்து காவல்துறைக்கு அளித்த முக்கிய தகவலின் அடிப்படையில் மிகப்பெரிய விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இது குறித்து ஒன்பது முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மூத்த மனிதவள அதிகாரி உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது மிக மோசமான குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன.