FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

திருவள்ளூரில் ரமலான் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை!

சென்னையை அடுத்த திருவள்ளூரில் ரமலான் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

Updated On : 21 மார்ச் 2026, 11:30 am IST
திருவள்ளூர்- ஊத்துக்கோட்டை சாலையில் உள்ள ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்ட முஸ்லிம்கள். - DPS
பகிர்:

திருவள்ளூர்: திருவள்ளூரில் நோன்பு திருநாளான ரமலான் பண்டிகையை முன்னிட்டு ஈத்கா மைதானத்தில் சனிக்கிழமை நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை சாலையில் உள்ள ஈத்கா மைதானத்தில் ரமலான் சிறப்பு தொழுகையில் முஸ்லிம்கள் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள் அனைவரும் அமைதியாகவும், மதநல்லிணக்கத்துடன் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தொழுகையில் ஈடுபட்டனர்.

அதையடுத்து, தொழுகை முடிந்து வெளியேறி வந்ததும் முஸ்லிம்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் ஒருவருக்கு ஒருவர் ஆரத்தழுவி இனிப்புகளை வழங்கி ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். அதற்கு முன்னதாக நோன்பு திருநாளை முன்னிட்டு ஏழை, எளிய மக்களுக்கு புத்தாடை மற்றும் பல்வேறு பொருள்கள் தர்மம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

Advertisement

Advertisement

இதையொட்டி பள்ளி வாசல்களில் பல்வேறு வண்ணவிளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மேலும், நோன்பு திருநாளை முன்னிட்டு 30 நாள்கள் வரையில் முஸ்லிம்கள் காலை முதல் மாலை வரையில் கடும் நோன்பு மேற்கொண்டு, தொழுகையிலும் ஈடுபட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் இந்த மாவட்டத்தில் பூந்தமல்லி, திருமழிசை, வெள்ளாத்துகோட்டை, ஊத்துக்கோட்டை, வேப்பம்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு அந்தந்த பகுதி பள்ளி வாசல்களில் நடந்த சிறப்பு தொழுகையில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments