நடிகர் அருள்நிதி பிறந்த நாள்! மை டியர் சிஸ்டர் சிறப்பு போஸ்டர்!
அருள்நிதியின் ‘மை டியர் சிஸ்டர்’ படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியீடு...
நடிகர் அருள்நிதியின் பிறந்த நாளை முன்னிட்டு மை டியர் சிஸ்டர் திரைப்படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
நடிகர்கள் அருள்நிதி, அருண் பாண்டியன் மற்றும் மலையாள நடிகை மம்தா மோகன்தாஸ் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் “மை டியர் சிஸ்டர்”. இந்தப் படத்தை இயக்குநர் பிரபு ஜெயராம் இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார்.
நகைச்சுவைத் திரைப்படமாக உருவாகி வரும் இப்படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
Advertisement
Advertisement
இப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், நடிகர் அருள்நிதியின் பிறந்த நாளை முன்னிட்டு, சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இறுதியாக, அருள்நிதி நடித்த அருள்வான் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
A special poster for the movie My Dear Sister has been released to mark actor Arulnithi's birthday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.