FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சூரி பிறந்த நாள்: மண்டாடி சிறப்பு போஸ்டர்!

மண்டாடி சிறப்பு போஸ்டர் வெளியீடு...

19 வினாடிகள் முன்பு
நடிகர் சூரி
பகிர்:

நடிகர் சூரியின் பிறந்த நாளை முன்னிட்டு மண்டாடி திரைப்படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியாகியுள்ளது.

நடிகர் சூரி நாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் ’மண்டாடி’. இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ளார். இப்படத்தில் சுஹாஸ், மஹிமா நம்பியார், சத்யராஜ், மிதுன் ஜெய் சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

நாகை பகுதி மீனவர்களின் வாழ்வியலையும் அங்கு நடைபெறும் படகுப் போட்டிகளையும் மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி பெரிய கவனத்தைப் பெற்றது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், நடிகர் சூரியின் பிறந்த நாளை முன்னிட்டு மண்டாடி திரைப்படத்தின் புதிய போஸ்டரை இன்று வெளியிட்டுள்ளனர்.

இப்படம் செப். 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சூரியின் படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவான திரைப்படமென்பதால் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

A special poster for the movie Mandadi has been released to mark actor Soori's birthday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments