லாரி மீது தனியார் பேருந்து மோதல்: 8 பேர் சாவு
சாலையோரம் நின்றிருந்த லாரி மீது தனியார் பேருந்து மோதியதில், குழந்தை உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்தனர்.
சாலையோரம் நின்றிருந்த லாரி மீது தனியார் பேருந்து மோதியதில், குழந்தை உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்தனர்.
கர்நாடக மாநிலம், தும்கூரு மாவட்டம், சிரா மற்றும் பட்டநாயக்கனஹள்ளியைச் சேர்ந்தவர்கள், கடந்த 19-ஆம் தேதி தனியார் பேருந்தில் சிகந்தூர் செளடேஸ்வரிதேவி திருவிழாவுக்கு சென்றுவிட்டு, ஞாயிற்றுக்கிழமை இரவு சொந்த ஊருக்கு திரும்பினர். அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சிரா அருகே தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் நின்றிந்த லாரி மீது மோதியது. இதில் 1 வயது குழந்தை உள்பட அனுஷா (7), ரத்னம்மா (38), சவிதா (21), சுமலதா (21), கிரிஜம்மா (50), சங்கர் (35), அஸ்வத்நாராயணா (40) ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த 10 பேர், லேசான காயமடைந்த 9 பேர் சிகிச்சைக்காக தும்கூரு, சிரா, பெங்களூரு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திவ்யா கோபிநாத், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஷோபாராணி உள்ளிட்டோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். இதுகுறித்து சிரா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.