பெங்களூரு

"கஜா' புயல்: அடுத்த 2 நாள்களுக்கு கர்நாடகத்தில் மழை

DIN

"கஜா'புயலின் எதிரொலியாக கடலோர மற்றும் தென்கர்நாடகத்தில் அடுத்த 2 நாள்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதுகுறித்து பெங்களூரு வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் நிலைகொண்டிருந்த "கஜா' புயல், மேற்கு-தென்மேற்குப் பகுதியில் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் தமிழகத்தின் பாம்பன் மற்றும் கடலூர் இடையே நாகப்பட்டினத்தில் கரையைக் கடந்தது. இதன் விளைவாக அடுத்த 2 நாள்களுக்கு கர்நாடகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. வியாழக்கிழமை காலை 8.30மணி நிலவரப்படி மாநிலத்தில் வறண்ட வானிலையே நிலவியது.
வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர கர்நாடகம் மற்றும் தென்கர்நாடகத்தின் உள்பகுதியில் மழை அல்லது இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வட கர்நாடகத்தின் வறண்ட வானிலையே நிலவும். அடுத்த 48 மணி நேரத்தில் தென்கர்நாடகத்தில் பரவலாக மழை அல்லது இடியுடன்கூடிய மழை பெய்யும். இதேகாலக்கட்டத்தில் வட கர்நாடகம் மற்றும் கடலோர கர்நாடகத்தின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.
பெங்களூரில் மழை: அடுத்த 48 மணி நேரத்தில் பெங்களூரில் வானம் மேகமூட்டத்துடன்காணப்படும். ஒருசில பகுதிகளில் பலத்தமழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த 2 நாள்களில் பெங்களூரில் தட்பவெப்பம் அதிகபட்சமாக 29 டிகிரி மற்றும் குறைந்தபட்சமாக 18 டிகிரி செல்சியசாக இருக்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

புது தில்லி-பாகல்பூா் சிறப்பு ரயில் இயக்கத்தில் திருத்தம் வடக்கு ரயில்வே அறிவிப்பு

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

ஆனந்ததாண்டவபுரம் பஞ்சவடீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

அரசு நிா்வாகம் மூலம் பருத்தி கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

SCROLL FOR NEXT