பெங்களூரு

சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு

DIN

கர்நாடகத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடியூரப்பா குற்றஞ்சாட்டினார்.
இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: மாநிலத்தில் சட்டம்- ஒழுங்கு முழுமையாக சீர்குலைந்துள்ளது. இதை கண்டுகொள்ளாமல் மாநில அரசு ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளது. யாரும் யாருடைய வார்த்தைக்கும் கீழ்படிவதில்லை என்ற மோசமான நிலை அரசு இயந்திரத்தில் காணப்படுகிறது. மாநிலம் முழுவதும் குறிப்பாக பெங்களூரு சமூகவிரோத சக்திகள் பட்டப்பகலில் கத்தி போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தும் அளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளது. 
விஜயநகரில் சிகரெட் வாங்கிக்கொண்டு பணம் கேட்டதற்காக ஒருவரை குத்திகொலை செய்துள்ளனர். மனிதநேயமற்ற இந்த கொலை காணொலியில் பதிவிடப்பட்டு, சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவிவருகிறது. பெங்ளூரில் நிலவும் சட்டம்- ஒழுங்கு எந்தளவுக்கு சீர்குலைந்துள்ளது என்பதற்கு இச்சம்பவமே சிறந்த எடுத்துக்காட்டாகும்.
ஒரு மாதத்துக்கு முன்பு மண்டியாவில் கடன் தொகையை திரும்ப செலுத்தவில்லை என்பதற்காக பெண் ஒருவரை இழுத்து சென்று ஜீப்பில் கடத்தி சென்ற சம்பவம் மூடிமறைக்கப்பட்டுள்ளது. வளர்ச்சிப் பணிகள் மட்டுமல்ல, மாநில அரசின் ஒவ்வொரு துறையும் சீர்குலைந்துள்ளன. சட்டம்- ஒழுங்கு இதுபோல கெட்டுவிட்டால், மாநிலத்தில் தொழில்முதலீடுகளில் ஈடுபட யாரும் முன்வரமாட்டார்கள்.
இதுபோன்ற குற்றச்செயல்கள் மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் தொழில் முதலீடுகள் மீது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். காவல் துறையில் அரசியல் தலையீடுகள் அதிகரித்திருப்பதே இதற்கு முக்கியகாரணமாகும். அண்மையில் முன்னாள் அமைச்சர் ஜனார்தன ரெட்டி கைதுசெய்யப்பட்டு, ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளதே காவல் துறையின் நடவடிக்கைகளில் அரசியல் தலையீடுக்கு நல்ல
உதாரணமாகும். 
அரசியல் பழிவாங்கலுக்காக ஊழல் தடுப்புப் படைமற்றும் காவல்துறை கட்டமைப்பு தவறாக பயன்படுத்தப்படுகிறது. தமது விருப்பத்துக்கு இணங்க ஊழல் தடுப்புப் படையை மாநில அரசு ஆட்டிவைக்கிறது.  இது, அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதல்லாமல் வேறு என்ன? என்று அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டிஎன்ஏ போஸ்டர்!

இளவரசிகள்..

டி20 உலகக் கோப்பைக்குத் தயாராக ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு தேவை: முன்னாள் ஆஸி. கேப்டன்

காஷ்மீரில் தீவிரவாத அமைப்புத் தலைவர் சுட்டுக்கொலை

வேலூரில் தூய்மைப் பணியாளர் மீது மோதிய இருசக்கர வாகனம்: மரித்துப்போனதா மனிதம்?

SCROLL FOR NEXT