பெங்களூரு

புதிய தொழில்நுட்பமிகு மின் ஆட்டோ அறிமுகம்

DIN

புதிய தொழில்நுட்பங்களுடன் சுற்றுச்சூழலைப் பாதிக்காத மின் ஆட்டோவை மஹீந்திரா நிறுவனத்தினர் பெங்களூரில் வியாழக்கிழமை அறிமுகம் செய்தனர்.
பெங்களூரில் வியாழக்கிழமை மின் ஆட்டோ "டிரியோவை' அறிமுகம் செய்து வைத்த மஹீந்திரா நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் பவன்கோயங்கா பேசியது: 
தேசிய அளவில் முக்கிய நகரங்களில் வாகனங்கள் வெளியிடும் புகையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது. வாகனங்களை உற்பத்தி செய்ய மத்திய, மாநில அரசுகள் புதிய மின் வாகன கொள்கைகளை வகுத்துள்ளன. இதை கருத்தில் கொண்டு, டிரியோ ஆட்டோவை அறிமுகம் செய்து வைத்துள்ளோம். 
முதலில் பெங்களூரிலும் அதைத் தொடர்ந்து சென்னை, ஹைதராபாத், தில்லி, மும்பை ஆகிய நகரங்களில் மின் ஆட்டோவை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம். மின் ஆட்டோவால், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது. 50 பைசா செலவில் 1 கி.மீ தொலைவுக்கு ஆட்டோவை இயக்க முடியும். இது ஓட்டுநர்களுக்கு ரூ. 4 ஆயிரம் முதல் ரூ. 7 ஆயிரம் வரை மாதத்துக்கு கூடுதல் வருவாய் தரும். தில்லி, பெங்களூரு போன்ற நகரங்களில் மாசுவைக் கட்டுப்படுத்த இதுபோன்ற வாகனங்களின் வரவு உறுதுணையாக இருக்கும். 
மின் ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்களுக்கு கர்நாடக அரசும் வரவேற்பு அளித்து வருகிறது. பெங்களூரில் இதன் விலை ரூ. 1.36 லட்சத்தில் தொடங்குகிறது என்றார். நிகழ்ச்சியில் அந்நிறுவனத்தின் மூத்த செயல் அதிகாரி மகேஷ்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொதுத்தோ்வுகளில் வேலூா் பின்தங்குவதற்கான காரணங்களை அறிய சமூக ஆய்வு

மீஞ்சூா் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவம்

8% அதிகரித்த நிலக்கரி இறக்குமதி

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

30 கிலோ கஞ்சா கடத்தல்: 6 போ் கைது

SCROLL FOR NEXT