பெங்களூரு

விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க நடவடிக்கை

DIN


விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று எக்ஸ்டெப் தலைவர் டெங்சுயிபோ தெரிவித்தார்.
பெங்களுரில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் விளையாட்டு வீரர்களுக்கான ஆடை, காலணி உள்ளிட்டவற்றின் முதல் விற்பனைக் கிளையை தொடக்கி வைத்து அவர் பேசியது:-
இந்தியாவும், சீனாவும் விளையாட்டிலும், கலாசாரத்திலும், பாரம்பரியத்திலும் சிறந்து விளங்குகிறது. சீனாவை தலையிடமாகக் கொண்டு செயல்படும் எக்ஸ்டெப் குழுமத்தின் முதல் கிளையை பெங்களூரில் தொடங்கியுள்ளோம்.
விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சியுடன், விளையாட்டுக்கு உகந்த ஆடை, ஷூ உள்ளிட்டவை அணிவது அவசியம். சீனா, நேபாளம், சவூதி அரேபியா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் விளையாட்டு வீரர்களிடம் எக்ஸ்டெப் நிறுவன ஆடைகளுக்கு அதிக வரவேற்பு உள்ளது.
இந்தியாவிலும் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில் ஆடைகளை அறிமுகம் செய்துள்ளோம். இந்தியாவில் எங்கள் வர்த்தகத்தை மட்டுமின்றி, விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்க முடிவு செய்துள்ளோம். வரும் ஆண்டுகளில் பெங்களூரு மட்டுமின்றி இந்தியாவின் முக்கிய நகரங்களில் வர்த்தகத்தை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளோம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT