முகப்பு
பெங்களூரு

மாநகராட்சி அதிகாரிக்கு மிரட்டல்: ஒப்பந்ததாரர் கைது

பெங்களூரு மாநகராட்சி இணை ஆணையரை மிரட்டியதாக, ஒப்பந்ததாரரை போலீஸார் கைது செய்தனர்.

Updated On : 8 அக்டோபர் 2018, 8:30 am IST
பகிர்:

பெங்களூரு மாநகராட்சி இணை ஆணையரை மிரட்டியதாக, ஒப்பந்ததாரரை போலீஸார் கைது செய்தனர்.
பெங்களூரு ஜே.பி.பூங்கா பகுதியில் குப்பைகளை அள்ளுவதற்கான குத்தகையை ஒப்பந்ததாரர் வெங்கடேஷ் என்பவர் பெற்றுள்ளார்.  இவருக்கு மாநகராட்சி நிர்வாகம் ரூ. 63.88 லட்சம் பாக்கி தொகை வைத்திருந்ததாம். ஆனால் குப்பையை அள்ளாமல் வெங்கடேஷ் பொய்யான ஆவணங்களை உருவாக்கி பாக்கித் தொகையை கேட்பதாக மாநகராட்சி ஆட்சேபம் தெரிவித்திருந்தது. 
இதையடுத்து,  ராஜராஜேஸ்வரி நகரில் உள்ள மாநகராட்சி அலுவலகத்துக்கு அண்மையில் 6 பேருடன் சென்ற வெங்கடேஷ், தனக்கு சேர வேண்டிய பாக்கித்தொகையை தருமாறு இணை ஆணையர் எச்.பாலசேகரை மிரட்டினாராம். 
புகாரின்பேரில், ஒப்பந்ததாரர் வெங்கடேஷை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.